கிளியாற்றில் வெள்ளம்: கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்

கிளியாற்றில் வெள்ளம்: கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்
கிளியாற்றில் வெள்ளம்: கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்
Published on

மதுராந்தகம் ஏரி இருந்து வினாடிக்கு 30000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுவதால் கிளியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மதுராந்தகம் ஏரிக்கு கிளியாறு மற்றும் நெல்வாய் மடுவின் மூலமாக வினாடிக்கு 29,500 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த ஏரியின் முழு நீர்மட்ட அளவு 23.30 அடியாகும். ஏரிக்கு அதிகமான நீர்வரத்து உள்ளதால் தற்போதைய நீர்மட்ட அளவு 25.02 அடி ஆக உள்ளது. ஏரிக்கு வரும் 29,500 கனஅடி நீர் முழுவதும் மதுராந்தகம் ஏரியின் 110 எண்ணிக்கைகளில் உள்ள தானே விழும் ஷட்டர்கள் மூலமாகவும் மற்றும் ஆறாவது கலங்கல் மூலமாகவும் கிளி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது.

மதுராந்தகம் ஏரியில் உள்ள 2 அவசரகால ஷட்டர்கள் மூலம் வினாடிக்கு 2000 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. மொத்தமாக வினாடிக்கு 29,500 கனஅடி தண்ணீர் வெளியேறுகிறது. இதனால் கிளி ஆற்றங்கரையோரம் உள்ள கத்திரிசேரி, முன்னூத்தி குப்பம், முள்ளி வளர்பிறை உள்ளிட்ட 21 கிராமங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்டம் நிர்வாகம் சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com