பெரம்பலூர்:தொடர்மழையால் கிராமத்தில் வெள்ளம்: வீடுகளுக்குள் நீர் புகுந்ததால் மக்கள் தவிப்பு

பெரம்பலூர்:தொடர்மழையால் கிராமத்தில் வெள்ளம்: வீடுகளுக்குள் நீர் புகுந்ததால் மக்கள் தவிப்பு
பெரம்பலூர்:தொடர்மழையால் கிராமத்தில் வெள்ளம்: வீடுகளுக்குள் நீர் புகுந்ததால் மக்கள் தவிப்பு
Published on

பெரம்பலூர் அருகே தொடர்மழை பெய்துவருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்தது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை சந்தித்துள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டம் பச்சமலை பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மழையில் இருந்து வரும் காட்டாற்றால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே ஏரிகள் நிரம்பியிருந்த நிலையில் ஏரிக்கு வரும் நீர் முழுவதுமாக கரையை விட்டு வெளியேறி வருகிறது. இதனால் கால்வாய், ஓடை உள்ளிட்டவைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓட தொடங்கியுள்ளது.

தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்து காணப்படுகிறது. பூலாம்பாடி அண்ணாநகர் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் அதிகாலை முதல் வெள்ள நீர்புகுந்து வருவதால் அங்குள்ள 50 க்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

இதுகுறித்து தகவலறிந்த பூலாம்பாடி பேருராட்சி நிர்வாகத்தினர் கால்வாய்களில் மணல் மூட்டைகளை அடுக்கி தடுப்பு ஏற்படுத்தினர். பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த அதிகாரிகள் பாதிக்கப்பட்ட மக்களை அருகில் உள்ள தற்காலிக முகாமில் தங்க வைத்து உணவுக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

இவ்வாறு தீடீர் வெள்ளப்பெருக்கு ஏற்ப்பட்டதால் பூலாம்பாடியில் உள்ள அண்ணாநகர் குடியிருப்பு வாசிகள் திகைத்துப் போயுள்ளனர் என்றே கூறலாம். இது தவிர பூலாம்பாடி சுற்று வட்டாரபகுதிகளில் உள்ள பெரும்பாலான காட்டாறுகளிலும் கால்வாய்களிலும் வெள்ளநீர் கரைபுரண்டு செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com