சென்னையில் கனமழை காரணமாக வீடுகளில் மட்டுமல்ல, தொழிற்சாலைகளிலும் தண்ணீர் புகுந்துள்ளது.
சென்னை வியாசர்பாடி தொழிற்பேட்டையில், 200க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இருக்கின்றன. இவற்றில் பெரும்பாலனவற்றில் தண்ணீர் புகுந்துள்ளது. நேற்றிரவில் இருந்து தொழிற்சாலை பகுதியில் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக தொழிற்சாலைகள் செயல்படாததால் தொழிலாளர்களுக்கும் வேலை இல்லை.
25 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவரும் வியாசர்பாடி சிட்கோ பகுதியில் மோசமான சாலைகள், மழையால் மேலும் பாதிக்கப்பட்டுள்ளதால் மழைநேரத்தில் பலரும் விழுந்து காயம் அடைவதாக தொழிலாளர்கள் கூறுகிறார்கள்.
சிட்கோ நிர்வாகத்தின் கீழ் செயல்படும் வியாசர்பாடி தொழிற்பேட்டையின் குறைகளை சரிசெய்ய இனியாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொழிலாளர்கள் வலியுறுத்துகிறார்கள்.