விமானக் கட்டணம் 60% உயர்வு : பயணிகள் அதிர்ச்சி

விமானக் கட்டணம் 60% உயர்வு : பயணிகள் அதிர்ச்சி
விமானக் கட்டணம் 60% உயர்வு : பயணிகள் அதிர்ச்சி
Published on

கோவையில் இருந்து வடமாநிலங்களுக்கு செல்லும் விமானங்களின் கட்டணம் 60% வரை உயர்த்தப்பட்டுள்ளது.

கொரோனா பொதுமுடக்கத்தால் 2 மாதங்களாக முடங்கியிருந்த விமானச் சேவை கடந்த 25ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கப்பட்டது. அத்துடன் பல்வேறு கட்டுப்பாடுகளும், விதிமுறைகளும் விதிக்கப்பட்டன. இந்நிலையில் விமானக் கட்டணங்கள் 40% முதல் 60% வரை உயர்ந்திருப்பதாக கூறப்படுகிறது. கோவையிலிருந்து சென்றுவர ரூ.9,000 ஆக இருந்த டிக்கெட் விலை தற்போது ரூ.15,000 ஆக அதிகரித்துள்ளது.

இதேபோன்று இரண்டு பேர் டெல்லி செல்ல ரூ.10,000 வரை இருந்த டிக்கெட் விலை தற்போது ரூ.17,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. குறைந்த அளவிலான விமானங்களே இயக்கப்படுவதாலும், பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருப்பதாலும் விமான டிக்கெட்டுகளின் விலை உயர்த்தப்பட்டிருப்பதாக பயண ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com