காலநிலை மாற்றத்தை முன்கூட்டியே தெரிவிக்கும் ஃபிளேம் ஆஃப் பாரஸ்ட் பூக்கள் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் அதிகளவில் பூத்து குலுங்குகிறது. சுற்றுலா பயணிகள் இந்த பூக்களை ஆர்வமாக பார்த்து ரசித்து செல்கின்றனர்.
நாட்சுரல் இண்டிகேட்டர் என அழைக்க கூடிய ஃபிளேம் ஆஃப் பாரஸ்ட் பூக்களை தூரத்தில் இருந்து பார்க்கும் போது, வனப்பகுதியில் தீ பற்றி எரிவதை போன்ற தோற்றத்தை தருவது இதன் சிறப்பு என வன அதிகாரிகள் தெரிவித்தனர். பனிக்காலம் முடிவடைந்து வனப்பகுதியில் வெயில் காலம் தொடங்கும் போது இந்த பூக்கள் பூத்து குலுங்கும் எனவும் வனப்பகுதியில் இந்த பூக்கள் பூக்க துவங்கினால், விரைவில் வெயில் காலம் துவங்க உள்ளதை உணர்ந்து கொள்ளலாம் எனவும் அதிகாரிகள் கூறினர்.
ஒருவேளை இந்த பூக்கள் முன்கூட்டியே பூத்தாலோ அல்லது காலம் தாழ்ந்து பூத்தாலோ காலநிலையில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக இப்பகுதி மக்கள் கருதி கொள்வார்களாம்.