சென்னையில் உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு கூட்டாளிகளுடன் சேர்ந்து வழிப்பறியில் ஈடுபட்டுவந்த பிரபல டாட்டூ கலைஞர் உட்பட ஐந்து பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
வில்லிவாக்கம் பகுதியில் தொடர்ந்து சங்கிலி பறிப்பு சம்பவங்கள் நடைபெற்று வந்ததால் அதுகுறித்து சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் எண்களை ஆய்வுசெய்த காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில் வழிப்பறியில் ஈடுபட்டுவந்த திருவள்ளூரை சேர்ந்த இருவரை கைது செய்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் வழிப்பறிக்கு தலைவனாக இருந்தவர் பிரபல டாட்டூ கலைஞர் வசந்த் ப்ரியன் என்பது தெரியவந்தது. இதையடுத்து நடைபெற்ற விசாரணையில் வசந்த் ப்ரியன் உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு வழிப்பறியில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.