மீன்பிடித் தடைக்காலம்: 63 நாட்களுக்குப் பிறகு கடலுக்குச் சென்ற பாம்பன் மீனவர்கள்

மீன்பிடித் தடைக்காலம்: 63 நாட்களுக்குப் பிறகு கடலுக்குச் சென்ற பாம்பன் மீனவர்கள்
மீன்பிடித் தடைக்காலம்: 63 நாட்களுக்குப் பிறகு  கடலுக்குச் சென்ற பாம்பன் மீனவர்கள்
Published on

மீன்பிடித் தடைக்காலம் முடிந்த நிலையில், 63 நாட்களுக்குப் பிறகு பாம்பன் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர்.

தமிழக அரசு ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 வரை 61 நாள் மீன்பிடித் தடைக்காலம் அறிவித்தது. இந்நேரத்தில் மீன்கள் இனப்பெருக்கம் காலமாகக் கருத்தில் கொண்டு விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல மாட்டார்கள். மீன்பிடி தடைக்காலம் முடிந்து பாம்பன் பகுதி மீனவர்கள் இன்று கடலுக்குச் செல்லும் காரணத்தால் நேற்றே தங்களது படகுகளை பழுது பார்த்து கடலில் இறக்கி மீன் பிடிப்புக்குத் தேவையான ஐஸ்கட்டி, உபகரணங்கள், மீன்பிடி வலைகள் தேவையான உணவுகள், குடிநீர் ஆகியவற்றை தங்களது படகுகளில் ஏற்றி வைத்திருந்தனர்.

இந்த நிலையில் மீன்வளத்துறை அலுவலகத்தில் மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 1500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். முந்தைய காலகட்டத்தை விட கொரோனா காலமென்பதால் விலைகள் அனைத்தும் இருமடங்காக உயர்ந்திருப்பதாகவும், மீன்பிடி உபகரணங்கள் பழுது பார்த்ததில் அதிக செலவு ஏற்பட்டது முதல் கடலில் இலங்கை பிரச்னைகள் ஏதேனும் இருந்தால் செலவு செய்த பணம் வீணாகிடுமே என்ற அச்சத்துடன் மீனவர்கள் கடலுக்கு சென்று உள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com