பிரிட்ஜோவின் உடல் நல்லடக்கம்: மீனவர் போராட்டம் தற்காலிக வாபஸ்

பிரிட்ஜோவின் உடல் நல்லடக்கம்: மீனவர் போராட்டம் தற்காலிக வாபஸ்
பிரிட்ஜோவின் உடல் நல்லடக்கம்: மீனவர் போராட்டம் தற்காலிக வாபஸ்
Published on

இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்ட மீனவர் பிரிட்ஜோவின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது. மீனவர் கொலையை கண்டித்து தங்கச்சி மடத்தில் கடந்த 7 நாட்களாக நடந்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.

நடுக்கடலில் இலங்கை கடற்படையின் துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையான இளம் மீனவர் பிரிட்ஜோவின் உடலை வாங்க மறுத்து ராமேஸ்வரம் தங்கச்சிமடத்தில் கடந்த 7 நாட்களாக போராட்டம் நடந்து வந்தது. பெருமளவில் பெண்களும் பங்கேற்று வந்த இந்த போராட்டத்திற்கு ஆதரவாக கடலோர மாவட்டங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் ஆயிரக்கணக்கானோர், நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். சாலைமறியலாக நீடித்த பேராட்டம், காவல்துறையினர் பேச்சுவார்த்தையால் கைவிடப்பட்டது. பிரிட்ஜோ கொலைக்கு காரணமாக இலங்கை கடற்படை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கடந்த நான்கு நாட்களாக வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுவந்த காரைக்கால் மாவட்ட மீனவர்கள் இன்று முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நல்லவாடு பகுதியில் கைகளில் கருப்புக்கொடி ஏந்தி மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டத்தை மேற்கொண்டனர். இதற்கிடையே பிரிட்ஜோவின் உடல் அவரது உறவினர்களிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது. அங்கிருந்து தங்கச்சிமடம் போராட்டக்களத்திற்கு உடல் கொண்டுவரப்பட்டது. அங்கு பிரிட்ஜோ உடலுக்கு எராளமானவர்கள் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து பிரிட்ஜோவின் உடல் அந்தோணியார்புரம் கல்லறைக்கு ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. பிரிட்ஜோவின் இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். டெல்லியில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் முன்னிலையில் வரும் 20ம் தேதி நடைபெறும் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்படும் என்று மீனவர்கள் அறிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com