கருணைக் கொலை செய்யுங்கள்: 28 மீனவ குடும்பங்கள் ஆட்சியரிடம் மனு

கருணைக் கொலை செய்யுங்கள்: 28 மீனவ குடும்பங்கள் ஆட்சியரிடம் மனு
கருணைக் கொலை செய்யுங்கள்: 28 மீனவ குடும்பங்கள் ஆட்சியரிடம் மனு
Published on

திருவள்ளூர் அருகே தங்களை கருணைக்கொலை‌ செய்யக்கோரி, 28 மீனவ குடும்பங்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளன.

திருவள்ளூர் மாவட்டம் வல்லம்பேடு குப்பத்தில் 2016-ஆம் ஆண்டு மீனவ தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் குணா, அண்ணாதுரை ஆகியோர் உயிரிழந்தனர். இதில் ஒரு தரப்பைப் சேர்ந்த 28 குடும்பங்கள் கிராமத்தை விட்டு வெளியேறின. பி‌ன்னர் இவர்கள் கிராமத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை.

இதையடுத்து 28 குடும்பங்களும் தங்களை கருணைக்கொலை செய்யக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளன. இனி வாழ்வதற்கு வழியில்லாத காரணத்தினால் 28 குடும்பங்களை சேர்ந்த 110 பேரையும் கருணைக் கொலை செய்துவிடுமாறு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com