தமிழகத்தில் பெயிட்டி புயல் மழை தராதபோதிலும் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்குள் செல்லவில்லை.
வங்க கடலில் உருவாகியுள்ள 'பெய்ட்டி' புயல் ஆந்திராவின் காக்கிநாடா பகுதியில் இன்று கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக் கடலை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் சென்னைக்கு கிழக்கே 260 கிலோ மீட்டர் தொலைவில் தற்போது பெயிட்டி புயல் நிலை கொண்டிருக்கிறது.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம், கொகிலமேடு, கல்பாக்கம் போன்ற மீனவபகுதி மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்குள் செல்லவில்லை மீன்பிடி வலைகள் மற்றும் படகுகளை பாதுகாப்பாக எடுத்து வைத்துள்ளனர். இதுகுறித்து மீனவர்கள் கூறும் போது கடந்த சில தினங்களுக்கு முன் கஜா புயலின் காரணமாக கடலுக்கு செல்லவில்லை. மீண்டும் மற்றொரு புயல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் மீன்வளத்துறையில் இருந்து மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவேண்டாம் என அறிவுறித்தி உள்ளார்கள். மேலும் கடலுக்கு செல்லாததால் எங்களுடைய வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கபட்டுள்ளதாகவும் அரசு மீனவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கவேண்டும் என தெரிவித்தனர்.