சென்னை: மீன்பிடிக்க சென்றபோது கடலுக்குள் சிக்கிய மீனவர்... தீவிரமடையும் மீட்பு பணிகள்!

சென்னை திருவொற்றியூரில் மீன்பிடிக்கச்சென்ற மீனவர் ஒருவர் வழியில் மாயமானதால், அவரை தேடும் பணி நடைப்பெற்று வருகிறது.
மீனவர்
மீனவர்Representation image
Published on

சென்னை திருவொற்றியூர் குப்பம் பகுதியில் இருந்து இன்று அதிகாலை 1:30 மணியளவில் கடலுக்கு குப்பன், பட்டு, சின்னபிள்ளை மற்றும் இளையராஜா (38) எனும் நான்கு பேர் மீன்பிடிக்க சென்றுள்ளனர். இதில் இளையராஜா (38) என்பவர் தண்ணீரில் விழுந்து காணாமல் போய் உள்ளார்.

இளையராஜா மீனவர்
இளையராஜா மீனவர்PT

நீண்ட நேரம் ஆகியும் அவர் கடலில் இருந்து வெளி வராத நிலையில், உடன் சென்ற மீனவர்கள் இளையராஜாவைத் தேடி கடலில் குதித்துள்ளனர். ஆனாலும் இளையராஜாவை கண்டுபிடிக்க முடியாமல் போயுள்ளது. இதனால் கடலிலிருந்து கரைக்கு வந்த அவர்கள், மக்களுக்கு தகவல் கொடுத்துவிட்டு மீண்டும் ஊர் மக்கள் உதவியுடன் படகுகளில் சென்று இளையராஜாவை தீவிரமாக தேடி உள்ளனர்.

தகவல் அறிந்து திருவொற்றியூர் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டபோது, கரையிலிருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் கடலுக்குள் இளையராஜா காணாமல் போனது தெரிய வந்துள்ளது. இதனால் தீயணைப்புத் துறையினர் ”எங்களால் எதுவும் செய்ய முடியாது, நீங்கள் கடற்படை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவியுங்கள்” என கூறிவிட்டு திரும்பிச் சென்றுள்ளனர்.

இதனால் ஊர் மக்களும் உறவினர்களும் செய்வதறியாமல் திகைத்த நிலையில் கரையில் சோகத்துடன் அமர்ந்திருந்தனர். தொடர்ந்து அங்கு மீட்பு பணிகள் நடப்பதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com