மழை, பட்டாசு வெடித்ததில் சென்னையில் 7 இடங்களில் இன்று தீவிபத்து

மழை, பட்டாசு வெடித்ததில் சென்னையில் 7 இடங்களில் இன்று தீவிபத்து
மழை, பட்டாசு வெடித்ததில் சென்னையில் 7 இடங்களில் இன்று தீவிபத்து
Published on

சென்னையில் இன்று காலை முதல் 7 இடங்களில் தீ விபத்து சம்பவங்கள் நடந்துள்ளது. பட்டாசு வெடிப்பில் ஒரு தீவிபத்து சம்பவம் மட்டுமே நடந்துள்ளது.

  • கிண்டியில் பட்டாசு வெடிக்கும்போது தீப்பொறி பட்டு அருகிள்ள காய்ந்த மரம் பற்றி எரிந்துள்ளது. பின் அணைக்கப்பட்டது
  • தி.நகரில் வாஷிங் மெசினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.
  • அசோக் நகரில் வீட்டில் மின் கசிவு காரணமாக ஏற்பட்ட சிறிய அளவிலான தீ அணைக்கப்பட்டது.
  • மேடவாக்கத்தில் அரசு அலுவலகத்தில் மின்கசிவால் ஏற்பட்ட தீ அணைக்கப்பட்டது.
  • கோயம்பேட்டில் ரோகினி தியேட்டரில் அண்ணாத்த திரைபடத்துக்கு வந்தவரின் கார் எரிந்து முழுவதும் நாசமாகியது.
  • திருவான்மியூரில் வீட்டு பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர் தீ கசிவு ஏற்பட்டு தீவிபத்து நிகழ்ந்தது. அணைக்கப்பட்டது. தரையில் பதிக்கப்பட்ட மின்மாற்றி(EB BOX) யில் மின்கசிவால் ஏற்பட்ட தீ அணைக்கப்பட்டது.
  • பட்டாசு வெடிப்பு காரணமாக சென்னையில் ஒரே ஒரு தீ விபத்து சம்பவம் மட்டுமே ஏற்பட்டுள்ளது.

இந்த ஏழு விபத்துக்களில் 4 தீ விபத்துக்கள் மழையின் காரணமாக மின்கசிவு ஏற்பட்டதால் உண்டானது எனப்து குறிப்பிடத்தக்கது. 7 தீவிபத்து சம்பவங்களிலும் யாருக்கும் எவ்வித உயிர்ச்சேதமோ காயமோ ஏற்படவில்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com