கனமழையால் 4,133 இடங்கள் பாதிக்கப்படும் என கண்டறியப்பட்டுள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி உதயக்குமார் தெரிவித்துள்ளார்.
வங்கக் கடலில் உருவாகும் 'நிவர்' புயல் தமிழக கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. இது காரைக்கால் - மாமல்லபுரம் இடையே வரும் 25-ம் தேதி பிற்பகல் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், கனமழையால் 4,133 இடங்கள் பாதிக்கப்படும் என கண்டறியப்பட்டுள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி உதயக்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், கனமழையால் 4,133 இடங்கள் பாதிக்கப்படும் எனவும் பாதுகாப்பற்ற பகுதிகளாக 4,133 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன எனவும் குறிப்பிட்டார்.
மேலும், புயல் எச்சரிக்கையால் தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் நிவாரண முகாம்களுக்கு செல்ல வேண்டும் எனவும் கட்டுப்பாட்டு மையம் மூலம் புயலின் தன்மை குறித்து 24 மணிநேரமும் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.