வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டவரை பாதிக்கப்பட்டவர்கள் கடத்திச் சென்றனர்.
சென்னை அசோக் நகரில் மனிதவள மேம்பாட்டு நிறுவனம் நடத்தி வரும் ரபீக் என்பவரது மகன் இம்ரான் வெளிநாட்டு வேலைக்கு அனுப்புவதாக கூறி சிலரிடம் பண மோசடியில் ஈடுபட்டு தலைமறைவானதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பணத்தை கொடுத்து ஏமாந்தவர்கள் சிலர், ரபீக்கை தாக்கி அவரது காரிலேயே கடத்தி சென்றுள்ளனர். இதையடுத்து ரபீக்கின் உறவினர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில், தனிப்படை அமைத்து தேடிய காவல்துறையினர், சாலிகிராமத்தில் உள்ள வழக்கறிஞரின் அலுவலகத்தில் இருந்து ரபீக்கை மீட்டனர். இதுதொடர்பாக 12 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய 3 வழக்கறிஞர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.