இன்றைய சட்டசபையில் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் ஆகியோர் காரசாரா விவாதத்தில் ஈடுபட்டனர்.
இன்று சட்டசபையில் பேசிய வானதி சீனிவாசன், “இதுவரை மத்திய அரசு என அழைத்துவிட்டு சமீபத்தில் ஒன்றிய அரசு என அழைப்பதை நாம் பார்க்கிறோம். ரோஜாவை எந்த பெயரை வைத்தாலும் அதன் வாசத்தை மாற்ற முடியாது. அதே போல மத்திய அரசை எந்த பெயர் வைத்து அழைத்தாலும் மத்திய அரசின் அதிகாரத்தை குறைக்க முடியாது. சமூகநீதிக்கு பிரதமர் மோடி ஒரு உதாரணம், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் அவர்” என தெரிவித்தார்
இதற்கு பதிலளித்து பேசிய நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், “ ரோஜா ரோஜா தான். ரோஜாவை யாராவது மல்லிகை என்பார்களா ? குஜராத் முதல்வராக இருந்த போது மோடி எழுப்பிய கேள்விகள் எங்களுக்கு முன்னுதாரணமாகவே உள்ளன. வானதி சீனிவாசன், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினராக சட்டப்பேரவைக்கு வந்துள்ளாரா அல்லது ஒரு அரசியல் கட்சியின் பாதுகாவலாக வந்துள்ளாரா?” என்று கேள்வி எழுப்பினார்