கோவைக்கே உரிய நகைச்சுவை... ஜிஎஸ்டி குறித்து நிதியமைச்சரிடம் பேசிய உணவக உரிமையாளர்! #Video

தொழில் அமைப்பினருடன் நிதியமைச்சர் கலந்துரையாடிய நிகழ்வில் நடந்த சுவாரஸ்களை தற்போது பார்க்கலாம்.
கோவை
கோவைமுகநூல்
Published on

ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு விதமான ஜிஎஸ்டி வசூலிக்கப்படுவது குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் உணவக அதிபர் ஒருவர் நகைச்சுவை பாணியில் வைத்த கோரிக்கையால் சிரிப்பலை எழுந்தது. தொழில் அமைப்பினருடன் நிதியமைச்சர் கலந்துரையாடிய நிகழ்வில் நடந்த சுவாரஸ்களை தற்போது பார்க்கலாம்.

கோவை கொடீசியா வர்த்தக வளாகத்தில் ஜவுளி, நகை, ஓட்டல் உள்ளிட்ட பல்வேறு தொழில் அமைப்புகளை சேர்ந்தவர்களுடன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனும் கலந்துகொண்டார். இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் தொழில் அமைப்பினர் தங்களது கோரிக்கைகளை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் தெரிவித்தனர்.

கோவை
ஹரியானா தேர்தல் | நான்காம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு; களத்தில் தீயாய் செயல்படும் ஆம் ஆத்மி

அந்தவகையில், தமிழ்நாடு ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சீனிவாசன், ஜிஎஸ்டி வரி விதிப்பால் உணவகம் நடத்துபவர்கள் சந்திக்கும் சிரமங்களை, கோவைக்கே உரிய நகைச்சுவையுடன் எடுத்துரைத்தார்.

தமிழ்நாடு ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சீனிவாசன்
தமிழ்நாடு ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சீனிவாசன்

குறிப்பாக, “10 ஆண்டுகளுக்கு முன், இருந்த வங்கிகளின் செயல்பாடு மாறி தற்போது வங்கிகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. ஆனால் இனிப்புக்கு 5% காரத்திற்கு 12%, பிரட், பன் தவிர பேக்கரி 28%, என தனித்தனியாக பில்லில் ஜி.எஸ்.டி., போட்டால் சிரமமாக உள்ளது. கோவை பாஜக எம்.எல். ஏ. வானதி அவர்கள், எங்களின் வாடிக்கையாளர். அவர் தினமும் சாப்பிட வரும்போதெல்லாம், ஜி.எஸ்.டி தொடர்பாக தகராறு செய்கிறார் (நகைச்சுவாயாக குறிப்பிட்டு). ஏனெனில் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு மாதிரியாக ஜி.எஸ்.டி வருகிறது.

ஒரு குடும்பம் சாப்பிட வந்தால், அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக சாப்பிடுகின்றனர். அவர்களின் ஒவ்வொரு உணவுக்கும் ஒவ்வொரு ஜி.எஸ்.டி என்றால், கணினியே திணறுகிறது. Bun and Jam என்றால், Jam-க்கு தனி ஜி.எஸ்.டி வருகிறது. Bun-க்கு இல்லை. வாடிக்கையாளர்களால் இதை புரிந்துகொள்ல முடிவதில்லை. அவர்கள், ‘ரெண்டையும் தனித்தனியா கொடுங்க, நாங்களே சேர்த்துக்கிறோம்’ என்கிறார்கள்.

உண்மையில் இத்தனை ஜி.எஸ்.டி.களால், அதிகாரிகளும் திணறி வருகின்றனர். ஆகவே அனைத்திற்கும் ஒரே மாதிரியான வரியை கொண்டு வாருங்கள். அதேபோல், தங்கும் விடுதிகளுக்கு 18% ஜி.எஸ்.டி., வரியையும் மாற்றி அமைக்க நடவடிக்கை வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.

இது குறித்து இந்த காணொளியில் காணலாம்.

முன்னதாக, நிர்மலா சீதாராமன் பேசும்போது, தமிழ்நாடு என்றால் ஜவுளி என குறிப்பிட்டார். அப்போது அரங்கமே அமைதியாக இருந்த நிலையில், கொங்குநாடு என்றால் ஜவுளி என கூறினால்தான் கைதட்டுவீர்களா என்று நகைச்சுவையாக குறிப்பிட்டார். தொழில் அமைப்பினரின் ஜிஎஸ்டி தொடர்பான கோரிக்கைகள் குறித்து டெல்லியில் ஜிஎஸ்டி கவுன்சிலில் கட்டாயம் பேசுவேன் என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதியளித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com