காஞ்சிபுரம் அத்திவரதர் தரிசனம் இன்று மாலையுடன் நிறைவடைய உள்ள நிலையில், அத்திவரதரை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
இறுதி நாளான இன்று பொதுதரிசனத்திற்கு மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். சுமார் ஒன்றரை லட்சம் பக்தர்கள் தரிசனத்திற்காக குவிந்துள்ளனர். இன்று மாலைக்குள் வரதராஜ பெருமாள் கோவிலுக்குச் செல்பவர்கள் அனைவரும் அத்திவரதரை தரிசிக்க முடியும். 47 ஆம் நாளான இன்று அத்திவரதர் மஞ்சள் மற்றும் ரோஜா நிற பட்டாடையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
ஜூலை 31 ஆம் தேதிவரை சயன கோலத்தில் காட்சியளித்த அத்திவரதர், அதன்பிறகு நின்ற கோலத்தில் அருள்பாலித்து வருகிறார். 46 நாட்களில் 1 கோடிக்கும் அதிகமானோர் அத்திவரதரை தரிசித்து உள்ளனர். வெளியூர்களிலிருந்து வரும் பக்தர்களை தங்க வைக்க, கோவிலில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் 3 கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தரிசனம் முடிந்து வரும் பக்தர்களுக்காக 46 இடங்களில் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்று மாலை அத்திவரதர் வைபவம் நிறைவடைந்த பின்னர் பணியாளர்கள் அனைவரும் வெளியேற் றப்படுவர். நாளை, ஆகம விதிப்படி அனந்தசரஸ் குளத்திற்குள் அத்திவரதர் பிரவேசம் செய்வதற்கான சடங்குகள் செய்யப்பட்டு, இரவு வைக்கப்படுவார்.