தந்தை-மகன் உயிரிழப்புக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவோம்: கனிமொழி

தந்தை-மகன் உயிரிழப்புக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவோம்: கனிமொழி
தந்தை-மகன் உயிரிழப்புக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவோம்: கனிமொழி
Published on

சாத்தான்குளத்தில் தந்தை-மகன் உயிரிழப்பு குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளதாக தூத்துக்குடி எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.

கடந்த 19ஆம் தேதி பொதுமுடக்கத்தை மீறி கடையை திறந்ததாக கூறி சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னீஸ் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் கைது செய்யப்பட்டனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கிளைச்சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள், திடீரென அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

விசாரணைக் கைதிகள் உயிரிழந்தது தொடர்பாக நீதிபதி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. விசாரணைக் கைதிகள் உயிரிழப்பில் முறையான விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் சாத்தான்குளத்தில் தந்தை-மகன் உயிரிழப்பு குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளதாக தூத்துக்குடி எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார். மேலும் இருவரின் உயிரிழப்புக்கு நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து போராடுவோம் என தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com