“எனது பேச்சுக்கான விளைவை நான் உணர்ந்துவிட்டேன்” - சென்னை உயர்நீதிமன்றத்தில் ஃபெலிக்ஸ் ஜெரால்ட்!

சவுக்கு சங்கரின் பேட்டியை ஒளிபரப்பியதாக கைது செய்யப்பட்ட யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்ட்க்கு ஜாமீன் வழங்கிய சென்னை உயர் நீதிமன்றம், அவரது யூடியூப் சேனலை மூட உத்தரவிட்டுள்ளது.
 ஃபெலிக்ஸ் ஜெரால்ட், சவுக்கு சங்கர்
ஃபெலிக்ஸ் ஜெரால்ட், சவுக்கு சங்கர்கூகுள்
Published on

செய்தியாளர் - சுப்பையா

தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகளையும் பெண் காவலர்களையும் ஆபாசமாகவும், அவதூறாகவும் பேசியதாக சவுக்கு சங்கர் மீது பதியப்பட்ட வழக்கில், சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சவுக்கு சங்கர் - சென்னை உயர் நீதிமன்றம்
சவுக்கு சங்கர் - சென்னை உயர் நீதிமன்றம்puthiya thalaimurai

இந்த வழக்கில், சவுக்கு சங்கரின் நேர்காணலை ஒளிபரப்பிய யூடியூப் சேனல் தலைமை நிர்வாகி ஃபெலிக்ஸ் ஜெரால்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

 ஃபெலிக்ஸ் ஜெரால்ட், சவுக்கு சங்கர்
“அமைச்சர் உதயநிதியே காரணம்... அவரது உத்தரவில்தான் எல்லாம் நடக்கிறது” - சவுக்கு சங்கர்

இவர், தன் மீதான வழக்கில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்த நிலையில், அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது. இதனால் இரண்டாவது முறையாக ஜாமீன் கோரி ஃபெலிக்ஸ் ஜெரால்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி T.V. தமிழ்ச்செல்வி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மேகநாதன், “சர்ச்சைக்குரிய வகையில் இனி பேச மாட்டேன் என இதேபோன்ற வேறொரு வழக்கில் ஏற்கெனவே ஃபெலிக்ஸ் பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருந்தார். ஆனால் அதனை மீறி தொடர்ந்து இப்படி பேசி வருகிறார்” எனக் கூறினார்.

அப்போது ஃபெலிக்ஸ் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன், “தனது பேச்சுக்கான விளைவை தற்போது அவர் உணர்ந்துவிட்டார். இனி ஒரு போதும் அவ்வாறு பேச மாட்டார். அந்த உறுதியை அவரே அளித்துள்ளார்” எனக்கூறினார்.

இதனையடுத்து, ஃபெலிக்ஸ்க்கு ஜாமீன் வழங்கிய நீதிபதி, “அவரது யூடியூப் சேனலை மூட வேண்டும். சர்ச்சைக்குரிய வகையில் இனி நேர்காணல் அளிக்க மாட்டேன் என விசாரணை நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவும்” என்று நிபந்தனை விதித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com