FedEx கொரியர் மோசடி: ரூ.17.5 லட்சம் பணத்தை இழந்த பிக்பாஸ் போட்டியாளர் சௌந்தர்யா – நடந்தது என்ன?

பெடக்ஸ் கொரியர் மோசடியில் ரூ.17.5 லட்சத்தை இழந்துள்ளதாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள சின்னத்திரை நடிகை சௌந்தர்யா தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் போட்டியாளர் சௌந்தர்யா
பிக்பாஸ் போட்டியாளர் சௌந்தர்யாpt desk
Published on

நாடு முழுவதும் பெடக்ஸ் கொரியர் மோசடி மற்றும் ஆன்லைன் டிரேடிங் மோசடி மூலமாக கோடிக்கணக்கான ரூபாய் பொதுமக்களிடமிருந்து சைபர் க்ரைம் மோசடி கும்பல்கள் கொள்ளை அடித்து வருகின்றனர். இது தொடர்பாக பல்வேறு வழக்குகள் நாடு முழுவதும் உள்ள பல காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டு தொடர்புடைய நபர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். தமிழகத்திலும் இந்த மோசடியில் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது கலந்து கொண்டுள்ள சௌந்தர்யா என்ற சின்னத்திரை நடிகை, சைபர் க்ரைம் மோசடியில் 17.5 லட்சம் ரூபாயை இழந்ததாக தெரிவித்த விவகாரம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
FIR copy
FIR copypt desk

தான் எட்டு வருடமாக சம்பாதித்ததை ஒரு போன் காலில் நடந்த சைபர் க்ரைம் மோசடி மூலமாக இழந்ததாகவும் அதனால்தான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் போட்டியாளர் சௌந்தர்யா
“உங்க கூட்டணி அவ்வளவு பலவீனமாவா இருக்கு?”- விசிக தலைவர் திருமாவளவனுக்கு பத்திரிகையாளர் மணி கேள்வி!

17.5 லட்ச ரூபாயை இழக்கும் வகையில் என்ன செய்தார்? நடிகை சனம் செட்டி கேள்வி?

ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை சனம் செட்டி தற்போது நடக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து ரிவ்யூ செய்து வீடியோ வெளியிட்டு வருகிறார். அதிலொரு ரிவ்யூவில், “நடிகை சௌந்தர்யா 17.5 லட்ச ரூபாயை இழக்கும் வகையில் என்ன செய்தார்? எதை மறைத்தார்?” என்று சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்துள்ளார். இதற்கு பதிலளிக்கும் வகையில் சௌந்தர்யாவின் குடும்பத்தினர் சைபர் க்ரைம் மோசடி தொடர்பான முதல் தகவல் அறிக்கையை பகிர்ந்து ஆதாரங்களை வெளியிட்டுள்ளனர்.

FIR copy
FIR copy

அதில், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பாக கொடுக்கப்பட்ட புகாரில் கடந்த செப்டம்பர் மாதம் சென்னை மேற்கு மண்டல சைபர் க்ரைம் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து இருப்பது தெரியவந்துள்ளது. இந்த வழக்கு குறித்து காவல்துறை தரப்பில் விசாரணை மேற்கொண்டதில் சின்னத்திரை நடிகை சௌந்தர்யா கடந்த ஆகஸ்ட் மாதம் 27ஆம் தேதி சூளைமேட்டில் உள்ள தனது வீட்டில் இருந்தபோது செல்போன் அழைப்பு ஒன்று வந்ததாக புகாரில் தெரிவித்துள்ளார்.

ஸ்கைப் கால் மூலமாக "டிஜிட்டல் அரெஸ்ட்" செய்து விசாரணை:

FedEx கொரியர் நிறுவனத்தில் இருந்து பேசுவதாகவும் மும்பையில் இருந்து ஈரானுக்கு தங்கள் பெயரில் அனுப்பப்பட்ட பார்சலில் பாஸ்போட்டுகள் மற்றும் MDMA போதைப் பொருள் உள்ளிட்டவை இருப்பதாகவும் அது தற்போது ரிட்டன் வந்துள்ளதால், இந்த விவகாரம் குறித்து சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரிப்பதாக ராகேஷ் சர்மா என்பவர் பேசியுள்ளார்.

cyber crime
cyber crimept desk

இதையடுத்து மும்பை சிபிஐ அதிகாரி என பேசிய நபர் நடிகை சௌந்தர்யாவை ஸ்கைப் கால் மூலமாக "டிஜிட்டல் அரெஸ்ட்" செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார். குறிப்பாக, போதைப் பொருள் பார்சல் அனுப்பாமல் இருந்தீர்களா? எனவும் நீங்கள் சம்பாதித்து வங்கியில் வைத்திருக்கிற பணம் இதுபோன்று போதைப் பொருள் காரணமாக சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் சேர்த்து வைத்துள்ளீர்களா? எனவும் பல்வேறு கோணத்தில் விசாரணை என்ற பெயரில் மிரட்டியதாக தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் போட்டியாளர் சௌந்தர்யா
தமிழ் தேசியம் என்ற பெயரில் திராவிடத்தை எதிர்த்து ஆரியத்திற்கு துணை போவது ஆபத்தானது - நடிகர் சத்யராஜ்

சிபிஐ அதிகாரி போல் பேசியவர்:

இதுகுறித்து நடிகை சௌந்தர்யா தொலைபேசியில் சிபிஐ அதிகாரி என பேசியவரிடம் விளக்கம் கேட்டபோது சிபிஐ வழக்கு தொடர்பான ஆவணத்தையும் ஆர்பிஐ ஆவணத்தையும் நடிகை சௌந்தர்யாவிற்கு whatsapp-ல் அனுப்பி உள்ளனர். இதைக் கண்டு உண்மை என நம்பி 12 பணப் பரிவர்த்தனை மூலமாக ரூ 17.5 லட்சம் பணத்தை சௌந்தர்யா அனுப்பியுள்ளார். குறிப்பாக சட்டவிரோத பணம் இல்லை என்றால் தாங்கள் தெரிவித்த வங்கிக் கணக்கிற்கு பணத்தை அனுப்புமாறும் ஆய்வு செய்து விட்டு பணத்தை திரும்பி அனுப்புவதாக சிபிஐ அதிகாரி போல் பேசியவர் கூறியதால் பணத்தை நடிகை சௌந்தர்யா அனுப்பியுள்ளார்.

Scam
Scamweb

சற்று நேரத்திற்குப் பிறகு பணம் வராததால் விசாரணை செய்ததில் நடிகை சௌந்தர்யா தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனடியாக தேசிய சைபர் க்ரைம் போர்டலுக்கு புகார் அளித்த பிறகு, சென்னை மேற்கு மண்டல சைபர் க்ரைம் பிரிவில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் சென்னை மேற்கு மண்டல சைபர் க்ரைம் பிரிவு போலீசார், கடந்த செப்டம்பர் மாதம் 10ஆம் தேதி வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.

பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்திய சௌந்தர்யாவை பாராட்டிய காவல்துறை:

விசாரணையில், சௌந்தர்யா அனுப்பிய பணம் மஹாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத், மும்பை ,அஸ்ஸாம், மைசூர் போபால் என பல்வேறு இடங்களில் ஒன்பது வங்கிக் கணக்குகளுக்கு சென்றடைந்தது தெரியவந்துள்ளது. வழக்கமாக ஒரே ஒரு வங்கிக் கணக்கில் பணத்தை ட்ரான்ஸ்ஃபர் செய்யச் சொல்லும் சைபர் க்ரைம் மோசடி கும்பல் இந்த விவகாரத்தில் ஒன்பது வங்கிக் கணக்கை கொடுத்து பணப் பரிவர்த்தனை செய்யச் சொன்னது மோசடியில் புதுவிதமாக இருப்பதாக சைபர் க்ரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Fake letter
Fake letterpt desk

இந்த விவகாரம் தொடர்பாக ஒருமாத காலமாக விசாரணை நடைபெற்று வருவதாகவும், தற்போது பல கோடி பேர் பார்க்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சைபர் க்ரைம் மோசடி குறித்து தெரிவித்த காரணத்தினால் பொதுமக்கள் விழிப்படைவதற்கு நடிகை சௌந்தர்யா ஒரு விதத்தில் உதவி உள்ளதாகவும் நடிகை சௌந்தர்யாவின் கருத்துக்கு சென்னை காவல்துறை நன்றியும் வரவேற்பும் தெரிவித்துள்ளது.

பிக்பாஸ் போட்டியாளர் சௌந்தர்யா
தமிழ்நாட்டின் முதல் பெண் தலைமை தேர்தல் அதிகாரி ஆகிறார் அர்ச்சனா பட்நாயக்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com