சென்னை மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் பிப்.1ல் தீர்ப்பு

சென்னை மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் பிப்.1ல் தீர்ப்பு
சென்னை மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் பிப்.1ல் தீர்ப்பு
Published on

சென்னையில் 12 வயது மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் பிப்ரவரி 1 ஆம் தேதி போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.

சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் 12 வயது மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பான வழக்கில் குடியிருப்பில் வேலை பார்த்தவர்கள் உள்ளிட்ட 17 பேர் கடந்த 2018 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டனர். இதுகுறித்த வழக்கை போக்சோ சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது.

குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பு 7 சாட்சிகள், அரசு தரப்பு 36 சாட்சிகளும் விசாரிக்கப்பட்டு, 120 ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. அனைத்து தரப்பு விசாரணைகளும் முடிவுற்ற நிலையில் தீர்ப்பு வழங்காமல் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இதனிடையே கைது செய்யப்பட்ட 17 பேரில் பாபு என்பவர் உயிரிழந்துவிட்டார். இந்நிலையில், மீதமுள்ள 16 பேர் மீது சென்னை சிறார் பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் பிப்ரவரி ஒன்றாம் தேதி தீர்ப்பு வழங்க உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com