கரும்பு லாரியை எதிர்பார்த்து சாலையில் காத்து நிற்கும் காட்டு யானை: வாகன ஓட்டிகள் அச்சம்

கரும்பு லாரியை எதிர்பார்த்து சாலையில் காத்து நிற்கும் காட்டு யானை: வாகன ஓட்டிகள் அச்சம்
கரும்பு லாரியை எதிர்பார்த்து சாலையில் காத்து நிற்கும் காட்டு யானை: வாகன ஓட்டிகள் அச்சம்
Published on

சத்தியமங்கலம் அடுத்த காராப்பள்ளம் சோதனைச்சாவடியில் கரும்பு லாரியை எதிர்பார்த்து காத்திருக்கும் காட்டுயானையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.

சத்தியமங்கலம் அடுத்த ஆசனூர் வனப்பகுதியில் யானைகள் அதிகளவில் உள்ளன. தமிழகம் கர்நாடக இடையே முக்கிய வழித்தடமாக உள்ள ஆசனூர் சாலையில் யானைகள் தீவனம் மற்றும் தண்ணீர் தேடி சாலையை கடந்து செல்வது வழக்கம். இந்நிலையில் கர்நாடகத்தில் இருந்து கரும்பு பாரம் ஏற்றிய லாரிகள், அதிக பாரம் காரணமாக சாலையில் வீசியெறியும் கரும்புத் துண்டுகளை காட்டுயானைகள் சாப்பிட்டு பழகியதால் சில யானைகள் தற்போதும் கரும்பு லாரியை எதிர்பார்த்து சாலையில் திரிகின்றன. இதில் ஒற்றை ஆண்யானை ஒன்று தினந்தோறும் காராப்பள்ளம் சோதனைச்சாவடிக்கு வந்து கரும்பு லாரியை எதிர்ப்பார்த்து நிற்கிறது.

அதிக உயரம், பாரம் ஏற்றும் லாரியை கட்டுப்படுத்த அமைக்கப்பட்ட தடுப்பு கம்பி அருகே நிற்பதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்கின்றனர். வாகனங்களை பார்த்து பழகிய யானை தொந்தரவு செய்வதில்லை. இருப்பினும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்கின்றனர். இன்று சோதனைச்சாவடி வந்த ஆண் ஒற்றையானை நீண்ட நேரமாக கரும்பு லாரியை எதிர்பார்த்து காத்திருந்தது.

யானையை பார்த்த வாகன ஓட்டிகள் நிறுத்தினர். அங்கிருந்த வனத்துறையினர் வாகன ஓட்டிகளிடம் யானை தொந்தரவு இன்றி நிற்பதால் தொடர்ந்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com