டைபாய்டு காய்ச்சலை பேய் பிடித்ததாக நம்பிய தந்தை: பரிதாபமாக உயிரிழந்த மகள்!

டைபாய்டு காய்ச்சலை பேய் பிடித்ததாக நம்பிய தந்தை: பரிதாபமாக உயிரிழந்த மகள்!
டைபாய்டு காய்ச்சலை பேய் பிடித்ததாக நம்பிய தந்தை: பரிதாபமாக உயிரிழந்த மகள்!
Published on

ராமநாதபுரம் அருகே டைபாய்டு காய்ச்சலை பேய் பிடித்துவிட்டதாக நம்பிய தந்தையால் மகள் பரிதாமாக உயிரிழந்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் கோரவள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வீர செல்வம். இவருக்கு கோபிநாத் என்ற மகனும், தாரணி என்கின்ற மகளும் உண்டு. இவரது மனைவி கவிதா 9 ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்து இறந்துவிட்டார். தாரணி கீழக்கரை தனியார் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வந்தார். சில மாதங்களுக்கு முன் வீட்டில் ஆடு, மாடு, நாய் இறந்ததாக தெரிகிறது. இதற்கு தற்கொலை செய்து கொண்டு இறந்த மனைவி கவிதாதான் காரணம் என சிலர் வீரசெல்வத்திடம் கூறியுள்ளனர்.

இதனிடையே கவிதா உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு சென்று வந்ததில் இருந்து தாரணிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கவிதாதான் தாரணிமீது பேயாக பிடித்ததாக சிலர் வீர செல்வத்திடம் கூற அவர்  பேய் ஓட்டும் பூஜை செய்துள்ளார். ஆனால், தாரணிக்கு உடல் நிலை சரியாகவில்லை.

அதன் பின்னர் ராமநாதபுரம் அருகே வாணி என்கிற ஊரில் உள்ள பெண் பூசாரியிடம் அழைத்துச்சென்றுள்ளார். அங்கு பேயோட்டும் பூஜையில் சாட்டை, சிறு குச்சியால் (பெரம்பு) தலை, கழுத்து உள்ளிட்ட இடங்களில் தாக்கியதில் தாரணி மயக்கமடைந்துள்ளார். இதனால் பயற்து போன பெண் பூசாரி தாரணியை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு கூறியுள்ளார். இதனையடுத்து வீர செல்வம் தாரணியை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று ரத்த பரிசோதனை செய்து பார்த்ததில் தாரணிக்கு டைபாய்ட் (TYPHOID) காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. ஆனால் வீர செல்வம் மீண்டும் ஒரு முறை பேய் ஓட்டுபவர்களிடம் அழைத்து சென்றால் உடல் நிலை சரியாகிவிடும் என கூறி வீட்டுக்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.

அன்று நள்ளிரவே தாரணிக்கு மீண்டும் கடுமையாக காய்ச்சல் ஏற்பட்டதால் உச்சிப்புளி அரசு ஆரம்ப சுகதார நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு தரணி இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மாணவி இறப்பில் மர்மம் உள்ளதாக சகோதரர் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com