25 வயதாகியும் 2 வயது குழந்தை போல இருக்கும் பெண்.. தாயாக கவனித்து கொள்ளும் தந்தை!

25 வயதாகியும் 2 வயது குழந்தை போல இருக்கும் பெண்.. தாயாக கவனித்து கொள்ளும் தந்தை!
25 வயதாகியும் 2 வயது குழந்தை போல இருக்கும் பெண்.. தாயாக கவனித்து கொள்ளும் தந்தை!
Published on

25 வயதாகியும் குழந்தையாக இருக்கும் மகளை தாய் ஸ்தானத்தில் இருந்து கவனித்துவருகிறார் தந்தை ஒருவர். வேலைக்குக்கூட செல்ல முடியாமல் 24 மணி நேரமும் மகளை கவனித்துக் கொள்ள வேண்டியுள்ளதால், போதிய வருமானம் இல்லாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் புளியராஜக்காபட்டி பெரியார் நகரை சேர்ந்த காளியப்பன் - மகாலட்சுமி தம்பதிக்கு மூன்று மகள்கள், ஒரு மகன். அவர்களில் ஒரு மகளான சுதா என்பவர் தான் 25 வயதாகியும் இரண்டு வயது குழந்தைபோல் இருக்கிறார். சுதாவால் நடக்க முடியாது. வெகுநேரம் உட்கார்ந்திருக்கவும் முடியாது. பேசும், கேட்கும் திறனற்ற இவருடைய 9 வயதில் தாய் மகாலட்சுமி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அதன்பிறகு தந்தை காளியப்பனும், இரண்டு சகோதரிகளும் சுதாவை பார்த்துக் கொண்டனர். சகோதரிகள் இருவருக்கும் திருமணமான பிறகு தந்தை காளியப்பன் தான் தாய் ஸ்தானத்தில் இருந்து சுதாவை கவனித்துக் கொள்கிறார்.

மகன் கார்த்தி பத்தாம் வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டு கூலி வேலைக்கு சென்று வருகிறார். அவரது வருமானம் மற்றும் மாற்றுத்திறனாளிக்கான மாதத்தொகை ஆயிரம் ரூபாயை வைத்து குடும்பத்தை நடத்துகிறார் காளியப்பன். போதிய வருமானம் இல்லாததால் அவரால் சுதாவிற்கு சத்தான உணவு கூட வாங்கி கொடுக்க முடியவில்லை. எனவே, தமிழக அரசு தனது மகளுக்கு உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார் இந்த தாயுமானவர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com