திருவள்ளூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் சுகாதார பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் அதிகமாக காய்ச்சல் பரவி வருகிறது. இதில் 101 பேர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் திருவள்ளூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் 22 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் காய்ச்சலின் தாக்கம் அதிகளவில் இருப்பதாகவும், எனவே இந்த பகுதிகளில் சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கிடையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மாவட்ட மருத்துவ இணை இயக்குநர் தெரிவித்துள்ளார். மேலும் சிலர் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு செல்வதாகவும், தேவையான தடுப்பு நடவடிக்கைகளை கால தாமதமின்றி எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.