ஒகி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர் குடும்பங்களை முதலமைச்சர் நேரில் சந்தித்து மீட்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கூறி உண்ணாவிரதப் போராட்டம் செய்ய முயன்ற சட்டக் கல்லூரி மாணவி நந்தினையை போலீசார் கைது செய்தனர்.
ஓகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் இன்னும் கரைத் திரும்பவில்லை. அவர்களை மீட்க உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கன்னியாகுமரி முதல் நொச்சிக்குப்பம் வரை மீனவர்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஒகி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர் குடும்பங்களை முதலமைச்சர் நேரில் சந்தித்து மீட்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று சென்னை கிரின்வேஸ் சாலையிலுள்ள முதலமைச்சர் இல்லம் முன்பாக சட்டக்கல்லூரி மாணவி நந்தினி உண்ணாவிரதப் போராட்டம் செய்ய முயன்றார்.
இந்நிலையில் சட்டக்கல்லூரி மாணவி நந்தினி மற்றும் அவரது தந்தையும் முதலமைச்சர் இல்லம் முன்பாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட ஆட்டோவில் வந்திறங்கினர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவர்களை கைது செய்து அதே ஆட்டோவில் அழைத்துச் சென்றனர்.