செஞ்சியில் நெல் மூட்டைகளை வைக்க முடியாமல் விவசாயிகள் தவிப்பு

செஞ்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் போதிய இடவசதி இல்லாததால், நெல் மூட்டைகளை வைக்க முடியாமல் விவசாயிகள் கடும் தவிப்புக்கு ஆளாகினர்.

நான்கு நாட்கள் தொடர் விடுமுறைக்கு பிறகு, விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு, நேற்று ஒரே நாளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் குவிந்தன.

ஆனால் போதிய இடவசதி இல்லாததால், பெரும்பாலான விவசாயிகள் தாங்கள் கொண்டு வந்த நெல் மூட்டைகளை ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு வெளியே வைத்தனர். நெல் மூட்டைகளை இறக்கி வைக்க இடம் இல்லாமல் சிலர் அவற்றை வாகனங்களிலேயே வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

செஞ்சி
மேலே மேம்பாலம்.. கீழே உற்சாகம் ததும்பும் பொழுதுபோக்கிடம்.. மக்களைக் கவரும் கத்திப்பாரா பூங்கா

நெல் மணிகளை சேகரிக்க, தற்காலிகமான இடத்தை அதிகாரிகள் ஒதுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைகின்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com