சிவகங்கை மாவட்டம் கீழடியில் திறந்தவெளி அகழ் வைப்பகம் அமைக்க இடம் தர விவசாயிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
முன்னதாக கீழடி, அகரம் உள்ளிட்ட நான்கு இடங்களில் நடைபெற்ற அகழாய்வில் கண்டறியப்பட்டவற்றை அவை இருந்த இடத்திலேயே காணும் வகையில் திறந்தவெளி அகழ் வைப்பகம் அமைக்க அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி கீழடியில் 6 ஏக்கர் அளவிலும், மற்ற 3 இடங்களில் தலா ஒரு ஏக்கர் அளவிலும் அகழ் வைப்பகம் அமைக்க நிலங்களை கையகப்படுத்துவது தொடர்பாக திருப்புவனத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் நிலம் தர மறுப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.
நிலம் தர மறுப்புக்கான காரணத்தை விசாரிகையில், ஏற்கனவே அகழாய்வுக்கு நிலங்களை எடுத்த போது அளித்த வாக்குறுதிகளை அதிகாரிகள் நிறைவேற்றவில்லை என விவசாயிகள் குற்றஞ்சாட்டினர். இதுகுறித்து கோட்டாட்சியரிடம் கேட்ட போது விவசாயிகளின் கோரிக்கை குறித்து மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்கப்படும் எனக் கூறினார்.
தொடர்புடைய செய்தி: திருநள்ளாறு சனீஸ்வரன் கோயில் நளன் குளத்தில் நீராட தடை