தஞ்சை மாவட்டம் பூதலூர் பகுதி விவசாயிகள் காப்பீட்டுத்தொகை வங்காததைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
2016ஆம் ஆண்டுக்கான காப்பீட்டுத்தொகை ஜூன் மாதமே வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்றும்,ஆனால் தற்போது வரை காப்பீட்டுத்தொகையை வழங்காமல் அதிகாரிகள் அலைக்கழிப்பதாகவும் விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். மாவட்ட ஆட்சியர், வேளாண் துறை அதிகாரிகளிடம் பல முறை மனு அளித்தும் காப்பீட்டுத்தொகை வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என விவசாயிகள் ஆதங்கப்படுகின்றனர்.
பூதலூர், சித்திரக்குடி, கோவில்பட்டு என 10க்கும் அதிகமான கிராமங்களில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், காப்பீட்டுத்தொகை வழங்கினால் மட்டுமே இந்தாண்டு சாகுபடியை தொடரமுடியும் என்றும் விவசாயிகள் கூறி மறியலில் ஈடுபட்டனர். ஒருவாரத்தில் காப்பீட்டுத்தொகை வழங்குவதாக வேளாண் துறை அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர்.