விமானநிலைய விரிவாக்கத்தால் பாதிக்கப்படும் விளைநிலங்கள்: மக்கள் அதிருப்தி

விமானநிலைய விரிவாக்கத்தால் பாதிக்கப்படும் விளைநிலங்கள்: மக்கள் அதிருப்தி
விமானநிலைய விரிவாக்கத்தால் பாதிக்கப்படும் விளைநிலங்கள்: மக்கள் அதிருப்தி
Published on

மாற்று விவசாய முறைகளைக் கையாண்டு கடுமையான உழைப்பால் உருவாக்கிய பாக்குத்தோட்டம் உட்பட 350 ஏக்கர் விவசாய நிலங்கள் சேலம் விமானநிலைய விரிவாக்கத்தால் அழிக்கப்பட உள்ளது. ஆகவே விவசாய நிலங்களை அழிக்கக்கூடாது என்று விவசாயிகள் முதல்வரிடம் மனு கொடுத்துள்ளனர்.

சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டார பகுதிகள் விவசாயத் தொழிலை மட்டுமே பிரதான தொழிலாகக் கொண்டுள்ளது. இந்தப் பகுதியில் நெல், கரும்பு, மஞ்சள், பூக்கள் உள்ளிட்ட பயிர்கள், கீரைகள், காய்கறிகள் போன்ற பயிர்களும் நடவு செய்யப்படுகின்றன. தற்போது ஏற்பட்டுள்ள கடுமையான வறட்சியிலும் பூக்கள் பயிரிடப்பட்டு அறுவடை செய்யப்பட்டு வருகிறது. ஆத்தூர், வாழப்பாடி போன்ற பகுதிகளில் மட்டுமே நன்றாக வளர்ந்து வந்த பாக்கு மரங்களை, புதிய முயற்சியாக தும்பிபாடி, சர்க்கரைசெட்டிபட்டி உள்ளிட்ட கிராமங்களிலும் நடவு செய்து வெற்றி கண்டுள்ளனர். அதுவும் தற்போது ஏற்பட்டுள்ள கடுமையான வறட்சியால் தென்னை, பனை முற்றிலுமாக கருகி அழிந்து வருகிறது. இந்நிலையில் பச்சை பசேல் என்று பாக்கு மரங்கள் வளர்ந்து காய் பிடித்துள்ளது. இந்தப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மாற்று முறை விவசாயத்தில் வெற்றி கண்டுள்ளனர். பாக்கு மட்டைகள் தற்போது நல்ல விலைக்கு விற்கப்பட்டு வருவதனால், எந்த வகையிலும் நஷ்டத்தை ஏற்படுத்தாமல் லாபம் கொடுத்து வருவதாக விவசாயிகள்  மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

வேளாண்மைத்துறை அதிகாரிகள் போதுமான உதவிகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கினால் மேலும், சிறப்பாக விவசாயம் செய்ய முடியும் என்றும் விவசாயிகள் தெரிவித்தனர். இந்நிலையில் பாக்குத்தோட்டம் உட்பட நெல், வாழை, கரும்பு, மஞ்சள் போன்ற தோட்டங்களும் விரைவில் அழியப்போகிறது. தற்போது சேலம் விமானநிலைய விரிவாக்கத்திற்கு இதுபோன்ற நன்கு விளைந்துள்ள பயிர்கள் அழிக்கப்பட இருக்கிறது. இதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் சேலம் மாவட்ட நிர்வாகம் துரிதமாக எடுத்து வருகிறது. ஆனால், பொன் விளையும் பூமியாக உள்ள விவசாய நிலங்களை அழிக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று விவசாயிகள் போராடி வருகின்றனர். இங்குள்ள நிலங்களில் விளையும் விலை பொருட்கள் ஆண்டிற்கு ஒரு லட்சம் பேருக்கு உணவு வழங்கி வரும் நிலையில் இவற்றை அழித்துவிட்டால் எதிர்காலத்தில் மாபெரும் உணவு பற்றாக்குறை ஏற்படும் என்று கூறும் விவசாயிகள் நன்கு விளைந்து வரும் விவசாய நிலங்களை கையகப்படுத்துவதைத் தடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வரிடம் கோரிக்கை மனுக்களையும் அளித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com