குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்குப் பிறகு பிறந்த பெண் குழந்தைக்கு, பட்டப்படிப்பு முடிக்கும் வரை ஆண்டுக்கு ரூ. 1.20 லட்சம வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
தனம் என்பவருக்கு ஏற்கனவே இரு பெண் குழந்தைகள் உள்ளதால் நாகர்கோயில் மாவட்டம் ஆசாரிப்பள்ளத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவர் மீண்டும் கர்ப்பம் தரித்ததால், குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை தோல்வி என அறிக்கை அளித்ததால் ரூ. 10 லட்சம் ரூபாய் இழப்பீடு கோரி தனம் வழக்கு தொடர்ந்தார்
சில நேரங்களில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை தோல்வியடைவும் வாய்ப்புள்ளது என்ற விஷயம் அறுவை சிகிச்சைக்கு முன்பே மனுதாரருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளதால் இழப்பீடு கோர முடியாது என்ற அரசின் விளக்கத்தை ஏற்க நீதிமன்றம் மறுத்தது.
மூன்றாவது பெண் குழந்தைக்கு 21 வயது வரையிலோ அல்லது பட்டப்படிப்பு வரையிலோ கல்வி கட்டணம், பாடபுத்தகங்கள், எழுதுபொருட்கள் ஆகியவற்றுக்காக ரூ. 1.20 லட்சம் வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது