பள்ளிப்பாளையம் அருகே கள்ளநோட்டு அடித்த கும்பலை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து 4 லட்சம் மதிப்பிலான 100 ரூபாய் கள்ள நோட்டுடன் சிக்கியது. நாமக்கல் மாவட்டம் பள்ளி பாளையம் அருகே உள்ள பாப்பம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுகுமார் இவர் பிளாஸ்டிக் பைப்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் மன உளைச்சல் அடைந்து இருந்த பொழுது பாப்பம்பாளையம் பகுதியில் பேக்கரி நடத்தி வரும் நாகூர் பானு என்பவரின் நட்பு கிடைத்தது.
பானுவிடம் தனக்கு ஏற்பட்ட கடனை தெரிவிக்கையில் அவர் ஏற்கெனவே youtube இல் கள்ள நோட்டு தயாரிப்பது பற்றி பார்த்திருப்பதாகவும் இயந்திரங்களை வாங்கி கொடுத்தால் கள்ளநோட்டை அடித்து நம் கடனை கட்டி விடலாம் என ஆலோசனை வழங்கியுள்ளார் அதனடிப்படையில் சுகுமார் தனது வீட்டில் இயந்திரங்களை வாங்கி அதனை தயாரிக்கும் முறை பற்றி அறியாததால் தொழில்நுட்பக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் சக்தி(22) என்பவரை பிணையக் கைதியாக பிடித்து அவரிடம் நோட்டு அடித்துக் கொடுக்கும்படி வற்புறுத்தியுள்ளார்.
உயிருக்கு அஞ்சி சக்தி ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் முறை பற்றி சொல்லிக் கொடுத்துக்கொண்டே பள்ளிபாளையம் போலீஸாருக்கு ரகசிய தகவல் அளித்ததின் பேரில் பள்ளிப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர் அப்பொழுது ஈரோட்டை சேர்ந்த ரமேஷ் என்பவர் தான் கொடுத்த கடனை சுகுமாரிடம் இருந்து கள்ள நோட்டுகளாக வாங்கிச் செல்ல தயாராக இருந்த பொழுது 4 பேரையும் போலீசார் கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.
பின்னர் விசாரணை மேற்கொண்டதில் தாங்கள் இரண்டு கோடி ரூபாய்க்கு கள்ள நோட்டு அடிக்க திட்டமிட்டிருந்ததாக குற்றவாளிகள் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் அவர்களை கைது செய்து கள்ள நோட்டு அடிக்க பயன்படுத்திய இயந்திரங்களை பறிமுதல் செய்ததுடன் அவர்களை கைது செய்து திருச்செங்கோடு குற்றவியல் நீதிபதி செல்வி.தனம் முன்பு ஆஜர்படுத்தினர் அவர்களை விசாரித்த நீதிபதி நான்கு பேரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்