ஸ்டெர்லைட் போராட்டம் : இணையதளங்களில் பரப்படும் பொய் பிரச்சாரங்கள்!

ஸ்டெர்லைட் போராட்டம் : இணையதளங்களில் பரப்படும் பொய் பிரச்சாரங்கள்!
ஸ்டெர்லைட் போராட்டம் : இணையதளங்களில் பரப்படும் பொய் பிரச்சாரங்கள்!
Published on

ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக சில புகைப்படங்கள் பகிரப்பட்டு பொய் பிரச்சாரங்கள் பரப்படுகின்றன.

ஸ்டெர்லைட் போராட்டம் வன்முறையாக மாறி, துப்பாக்கிச்சூடுகள் நடத்தப்பட்டுள்ளன. தூத்துக்குடியில் போராட்டக்காரர்கள் மற்றும் காவலர்கள் இடையே மோதல் வெடித்துள்ளது. இந்த மோதலில் காவலர்களுக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளது. ஆனால் போராட்டக்காரர்கள் 12 பேர் தூப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் காவல்துறையினருக்கு பலத்தை காயம் ஏற்பட்டுள்ளதாக சில புகைப்படங்கள் பகிரப்பட்டு பொய் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றனர். அத்துடன் போராட்டக்காரர்கள் பலரும் கொன்று குவிக்கப்பட்டுள்ளது போல் புகைப்படங்கள் பகிரப்பட்டு சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகின்றனர். இது போன்று பரப்படும் புகைப்படங்களில் பெரும்பாலானவை பொய்த் தகவல்களாக உள்ளன. எடுத்தக்காட்டாக, காவலர்கள் பலர் காயமடைந்துள்ளது போல், கீழு உள்ள புகைப்படம் பகிரப்படுகிறது.

ஆனால் இந்த புகைப்படம் 2015ஆம் ஆண்டு எடுக்கப்பட்டதாகும். இந்த புகைப்படம் 2015ஆம் ஆண்டு ஷமிலா பாஷா என்ற பெண் காணாமல் போன விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்னையில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஆகும். இது தற்போது தூத்துக்குடியில் நடந்த சம்பவம் போல பகிரப்படுகிறது. எனவே நெட்டிசன்கள் எந்த ஒரு புகைப்படத்தை பகிர்வதற்கு முன்னால், அதன் உண்மை தன்மை ஆராய்ந்து பகிரப்பட வேண்டும் என்பது அனைவரது கோரிக்கையாக உள்ளது.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com