“இரும்புத்திரை” பட பாணியில் மோசடி : 3 பேர் கைது

“இரும்புத்திரை” பட பாணியில் மோசடி : 3 பேர் கைது
“இரும்புத்திரை” பட பாணியில் மோசடி : 3 பேர் கைது
Published on

சென்னையில் இரும்புத்திரை பட பாணியில் போலி அடையாள அட்டை தயாரித்து வங்கிகளில் கடன்பெற்று மோசடி செய்ததாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையைச் சேர்ந்த யுவராஜ் என்பவ‌ர் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரிடம் புகார் ஒன்றை அளித்தார். அதில் தனக்கே தெரியாமல் தனது பெயரில் வங்கியில் சிலர் கடன் பெற்றிருப்பதாகக் கூறியிருந்தார். இதேபோல் தனது பெயரில் செல்போன் உள்ளிட்ட பொருட்கள் மாத தவணைக்கு வாங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இதுகுறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர் சென்னையைச் சேர்ந்த ராஜேஷ், ஆண்டனி மற்றும் வினோத் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், கைதான 3 பேரும் கொடுங்கையூரில் உள்ள பிரவுசிங் சென்டர் ஒன்றுக்கு ஜெராக்ஸ் எடுக்க வருபவர்களின் ஆவணங்களில் இருந்து தகவல்களை திருடி போலி ஆவணம் தயாரித்தது தெரியவந்துள்ளது. 

அடுத்தவரின் தகவல்களையும், அவர்களின் புகைப்படத்துக்கு பதில் வேறு புகைப்படத்தை பயன்படுத்தியும் போலி அடையாள அட்டை தயாரித்து‌ள்ளனர். அதன்மூலம் கடன் அட்டை பெறப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் கூறினர். 3 பேரும் கடன் அட்டை மூலம் தவணை முறையில் வீட்டு உபயோக பொருட்கள் வாங்கி அதனை குறைந்த விலைக்கு விற்பனை செய்து வந்ததாகவும், இதேபோல் 10 வருடங்களாக பலகோடி ரூபாய் மோசடி செய்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com