மதுரை: 12ம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு 10 ஆண்டுகளாக மருத்துவம்.. விசாரணையில் வெளிவந்த தகவல்!

மதுரை மாவட்டத்தில் கிளினிக் நடத்தி வந்தவரிடம் சந்தேகத்தின் பேரில் எழுந்த புகாரின் அடிப்படையில் சோதனை செய்யப்பட்டது. அப்போது, அவர் 12ம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு 10 வருடமாக மருத்துவம் பார்த்து வந்தது தெரியவந்துள்ளது.
abjith
abjithPT
Published on

செய்தியாளர் - மணிகண்டபிரபு

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியில் லட்சுமி கிளினிக் என்ற பெயரில் மேற்கு வங்கத்தை சேர்ந்த அபிஜித் பிஸ்வாஸ், அப்பகுதி மக்களுக்கு மருத்துவம் பார்த்து வருகிறார். ஆனால், மருத்துவ படிப்பு படிக்காமல், வெறும் 12ம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு 10 ஆண்டுகளாக பொதுமக்களுக்கு மருத்துவம் மற்றும் சிகிச்சை அளித்து வருவதாக, இவர் மீது புகார் எழுந்தது. இந்த புகாரின் அடிப்படையில், சுகாதார நலப்பணிகள் இணை இயக்குனர் செல்வராஜ், நேரில் திடீர் ஆய்வு செய்தபோது உரிய ஆவணங்கள் மற்றும் மருத்துவம் படித்ததற்கான ஆதாரம் இல்லாமல், பொதுமக்களுக்கு பல்வேறு நோய்களுக்கு ஊசி மற்றும் மருந்து மாத்திரைகள் கொடுத்தது தெரியவந்தது.

abjith
‘கோவையில் அண்ணாமலை ஜெயிக்கமாட்டாரா?’-விரக்தியில் ஆள்காட்டி கைவிரலை துண்டித்துக் கொண்ட பாஜக நிர்வாகி!

இந்த நிலையில், அவரை கைது செய்ய ஒத்தக்கடை காவல்துறையினரிடம் அளித்த புகாரின் அடிப்படையில் அபிஜித் பிஸ்வாஷை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் அவர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவம் பார்த்து வந்ததும், காய்ச்சல், வயிறுவலி மற்றும் சர்க்கரை நோய் என பல்வேறு நோய்களுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கியதோடு, ஊசியும் செலுத்தி போட்டுள்ளார்.

ஒத்தக்கடை பகுதியில் வாடகை கட்டிடத்தில் மருத்துவமனை நடத்தி வந்த நிலையில், இவரிடம் சிகிச்சை பெற்ற சிலர் சந்தேகம் ஏற்பட்டு அளித்த புகாரின் பேரில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். 10 ஆண்டுகளாக மேற்கு வங்கத்தை சேர்ந்த போலி மருத்துவர் மதுரையில் கிளினிக் நடத்தி மருத்துவம் பார்த்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

abjith
மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் - நாள்தோறும் தகவல்களை வெளியிட நிர்வாகம் முடிவு!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com