நீட் தேர்வில் போலிச் சான்றிதழ் கொடுத்து மோசடி செய்த வழக்கில், மூன்றாவது முறையாக சம்மன் அனுப்பியும் தந்தை, மகள் ஆஜராகாததால் அவர்களை கைது செய்த காவல்துறையினர் தீவிரம் காட்டியுள்ளனர்.
நீட் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்ததாக ராமநாதபுரம் மாணவி கடந்த 7-ம் தேதி சென்னையில் நடந்த மருத்துவக் கலந்தாய்வில் கலந்து கொண்டார். போலியாக சான்றிதழ் வழங்கியதை உறுதி செய்த பின்னர் பெரியமேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
ஏற்கெனவே காவல்துறையினர் விசாரணைக்கு 2 முறை அழைத்திருந்தனர். இன்று ஆஜராக 3 வது முறையாக சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை. தொடர்ந்து தலைமறைவாக இருக்கும் மாணவி தீக்ஷா, அவருடைய தந்தை பாலசந்திரனை பிடிக்க காவலர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். அதேபோல் சான்றிதழ் தயாரிக்க உதவிய நபர்கள் , கம்ப்யூட்டர் சென்ட்டர் ஊழியர்களை விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.