செங்கல்பட்டு| பள்ளி அருகே குழந்தைகள் கடத்தப்பட்டதாக வெளியான தகவலில் உண்மையில்! நடந்தது இதுதான்!

செங்கல்பட்டில், பள்ளியில் இருந்து வீட்டிற்கு செல்வதற்காக வெளியே வந்த குழந்தைகள் கடத்தப்பட்டனர் என்று வெளியான செய்தி தவறானது என்று உண்மை சரிபார்க்கப்பட்டுள்ளது.
குழந்தை கடத்தல்
குழந்தை கடத்தல்முகநூல்
Published on

செங்கல்பட்டு ஒமலூர் பகுதியில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நடுநிலைப் பள்ளியில் படித்து வரும் இரு குழந்தைகள் கடத்தப்பட்டனர் என்று வெளியான செய்தி தவறானது என்று உண்மை சரிபார்க்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் ஓமலூர் பகுதியை சேர்ந்த தம்பதி வேலன் மற்றும் ஆர்த்தி. இவர்களுக்கு ரட்சி்தா என்ற 11 வயது மகளும், நித்தின் என்ற 7 வயது மகனும் உள்ளனர். இவர்கள் ஒமலூர் பகுதியில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நடுநிலைப் பள்ளியில் 6 மற்றும் 2 ஆம் வகுப்பு படித்து வருகின்றனர்.

கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு இக்குழந்தைகளின் தாய் மற்றும் தந்தைக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், ஆர்த்தி தனது தாய் வீட்டிலும், வேலன் தனது இரு குழந்தைகளுடனும் வசித்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று(8.7.2024) வழக்கம் போல நித்தின் ,ரட்சிதா இருவரும் பள்ளி முடித்து வீடி திரும்ப முயன்றுள்ளனர். அப்போது ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் என இருவர் அக்குழந்தைகளை காரில் அழைத்து சென்றுள்ளனர். இதனைக் கண்ட பள்ளி நிர்வாகத்தினர் குழந்தைகளை யாரோ கடத்தி செல்கின்றனர் என குழந்தைகளின் தந்தை மற்றும் போலீசாருக்கும் தகவல் அளித்துள்ளனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், இச்சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தை கடத்தல்
”மொழி புரியாம ஆரம்பத்துல ரொம்ப கஷ்டப்பட்டேன்; சேவாக் எனக்கு உறுதுணையா இருந்தார்” - நடராஜன் பேச்சு

இந்நிலையில், ரட்சிதா மற்றும் நித்தின் ஆகிய இருவரும் கடத்தி செல்லப்படவில்லை என்ற உண்மை தமிழ்நாடு அரசின் உண்மை அறியும் குழுவால் கண்டறியப்பட்டுள்ளது.

குழந்தைகளின் தாய் - தந்தை இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்வதால், இக்குழந்தைகளின் தாய்தான் அவரின் நண்பரின்மூலம் ரட்சிதா மற்றும் நித்தினை அழைத்து சென்றுள்ளார் என்று தெரியவந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com