நெல்லை, தூத்துக்குடி: மின்கட்டணத்தை அபராதத்தொகை இல்லாமல் செலுத்த வழங்கப்பட்ட கால அவகாசம் நீட்டிப்பு

திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கு மின்கட்டணத்தை அபராதத்தொகை இல்லாமல் செலுத்த வழங்கப்பட்ட கால அவகாசம் பிப்ரவரி ஒன்றாம் நாள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
மின்கட்டணம்
மின்கட்டணம்புதிய தலைமுறை
Published on

திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கு மின்கட்டணத்தை அபராதத்தொகை இல்லாமல் செலுத்த வழங்கப்பட்ட கால அவகாசம் பிப்ரவரி ஒன்றாம் நாள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவிக்கையில், “ கனமழையின் காரணமாக திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள அதீத பாதிப்பினைக் கருத்தில் கொண்டு முதலமைச்சரின் வழிகாட்டுதலின் பேரில், மின் கட்டணத்தை அபராதத் தொகை இல்லாமல் செலுத்த கூடுதல் கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கடைசி நாள் டிசம்பர் 15 முதல் ஜனவரி இரண்டாம் நாள் வரை இருந்த நிலையில் தற்போது ஃபிப்ரவரி முதல் நாள் வரை அபராதம் இல்லாமல் கட்டணம் செலுத்த கூடுதல் கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. 

மின்கட்டணம்
திருமணம் மீறிய உறவை கண்டித்த கணவன்; கூலிப்படை வைத்து கொலை செய்த மனைவி! விசாரணையில் வெளிவந்த உண்மை!

இந்தக் கால நீட்டிப்பு வணிகப் பயன்பாடு, தொழிற்சாலைகள், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் மட்டுமல்லாது பிற மின்நுகர்வோர்கள் அனைவருக்கும் பொருந்தும்” என்றார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com