“தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் சாதாரண மருந்துகள் கூட இல்லாமல் மக்கள் அவதியுறுகிறார்கள். ஏராளமான மருத்துவப் பிரச்சனைகள் உள்ளன” என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியுள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவு தின நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வாங்குவதற்காக, இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகம் சென்றிருந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அங்கு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவுநாளன்று அவரது நினைவிடத்தில் அதிமுக சார்பில் நடைபெறும். நினைவு அஞ்சலி மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு கேட்டு கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனைகளில் சாதாரண மருந்துகள் கூட இல்லாமல் மக்கள் அவதியுறுகிறார்கள். ஏராளமான மருத்துவப் பிரச்சனைகள் கண்டுகொள்ளப்படாமல் உள்ளன. மருத்துவர்களை மிரட்டும் செயல்களும் நடக்கிறது. அரசு மருத்துவமனைகளுக்கு சென்றால் நல்ல சிகிச்சை கிடைக்கும் என்ற நிலையை உருவாக்காமல் இருக்கிறார் மருத்துவத்துறை அமைச்சர். ஊடகங்களில் வரும் மருத்துவமனைகள் குறித்த செய்திகளைத் தான் நான் கூறுகிறேன். ஆன்லைன் விளையாட்டுகளை பொருத்தவரை திமுக அரசு முறையான நடவடிக்கை எடுக்கவில்லை. ஆன்லைன் விளையாட்டுகளை வளர்த்து விடுகின்ற வேலையை திமுக அரசு மேற்கொள்கிறது” என்றார்.
தொடர்ந்து அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்து பேசும்போது, “ஓபிஎஸ் கதை முடிந்த கதை" என்றார். இவரின் முழுமையான பேட்டியை, இங்கே காணுங்கள்: