ஆதிச்சநல்லூரில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இன்று அகழாய்வு பணி துவங்கியது

ஆதிச்சநல்லூரில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இன்று அகழாய்வு பணி துவங்கியது
ஆதிச்சநல்லூரில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இன்று அகழாய்வு பணி  துவங்கியது
Published on
ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு அகழாய்வு பணிகள் இன்று துவங்கியது.
உலகில் முதன் முதலில் அகழாய்வு நடத்தப்பட்ட இடம் ஆதிச்சநல்லூர் ஆகும். 1876 ஆம் ஆண்டு முதன்முதலில் அகழாய்வு நடைபெற்றது. 1903-04ஆம் ஆண்டுகளில் மீண்டும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பின்னர் கடந்த 2004 - 05ம் ஆண்டு சத்தியமூர்த்தி குழுவினர் இந்த அகழாய்வை மேற்கொண்டனர். அப்போது 600 சதுர மீட்டர் அளவில் அகழாய்வு நடைபெற்றது. 160-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள், இரும்பு, வெண்கல பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில், ஆதிச்சநல்லூரில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு மத்திய தொல்லியல் துறை சார்பில் இன்று அகழ்வுப் பணி துவங்கியுள்ளது. இந்த அகழ்வாய்வு பணிகளை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, மத்திய தொல்லியல் துறையின் திருச்சி மண்டல இயக்குனர் அருண்ராஜ், மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் ஆகியோர் அகழாய்வுப் பணியைத் துவக்கி வைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com