கரூர்: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான நில அபகரிப்பு வழக்கு – முன்ஜாமீன் மனு தள்ளுபடி

போலி ஆவணங்கள் மூலம் 100 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை பறிமுதல் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமீன் கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்pt desk
Published on

செய்தியாளர்: வி.பி.கண்ணன்

அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். இவர் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்துக் கொண்டதாக கரூரைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் நகர காவல்நிலையத்தில் புகாரளித்தார். இதன் பேரில் 7 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.

CBCID office
CBCID office

இந்நிலையில், நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். வழக்கு விசாரணை 4 முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், நீதிபதி சண்முக சுந்தரம் முன்ஜாமீன் மனுவை விசாரித்தார். அப்போது எம்.ஆர்.விஜயபாஸ்கரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
ஆல் இந்தியா பர்மிட் கொண்ட ஆம்னி பேருந்துகள் தடை வழக்கு - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

இதனிடையே எம்.ஆர்.விஜயபாஸ்கரை கைது செய்ய காவல்துறையினர் தீவிரம் காட்டியுள்ள நிலையில், அவர் தலைமறைவாகி உள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com