ஜூன் 14இல் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

ஜூன் 14இல் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
ஜூன் 14இல் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
Published on

அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் வரும் 14-ஆம் தேதி நடைபெற உள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

வருகிற 14ஆம் தேதி அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடத்த போலீஸ் அனுமதிகோரி டிஜிபி அலுவலகத்தில் மனு அளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,  ஆளுங்கட்சியின் குறைகளை மக்களிடம் எடுத்துச்சொல்வது அதிமுக தொண்டர்களின் எண்ணமாக இருக்கவேண்டும் என்று கூறினார்.

சசிகலா வெளியிட்ட ஆடியோ குறித்து கேட்டபோது, சசிகலா இல்லாமல் அதிமுக சிறப்பாக செயல்பட்டு வருகிறது; இந்நிலை தொடரும் என்று கூறினார். மேலும் அதிமுக பொதுச் செயலாளரை புதிதாக தேர்வுசெய்ய மாட்டோம் என்றும் ஓபிஎஸ்-ஈபிஎஸ் இருவரும் கட்சியை வழி நடத்துவார்கள் என்றும் தெரிவித்தார்.

திமுக ஆட்சிகுறித்து கேட்டபோது, திமுக, அதிமுக இடையேயான வாக்கு வித்தியாசம் வெறும் 3% தான். ஈபிஎஸ்-ஓபிஎஸ்ஸை மக்கள் ஏற்றுக்கொண்டதால்தான் அதிகளவு வாக்கு சதவிகிதம் பெற்றுள்ளோம் என்று கூறினார். எதிர்க்கட்சி துணைத்தலைவர், கொறடா ஆகியோர் இதுவரை தேர்வு செய்யப்படாத நிலையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறவிருக்கிறது. மேலும் சசிகலாவின் ஆடியோக்கள் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் அதுபற்றி இந்தக் கூட்டத்தில் பேசப்படலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com