”புதிய கல்விக்கொள்கையில் இந்தி திணிப்பு இல்லை” - முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை

”புதிய கல்விக்கொள்கையில் இந்தி திணிப்பு இல்லை” - முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை
”புதிய கல்விக்கொள்கையில் இந்தி திணிப்பு இல்லை” - முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை
Published on

புதிய கல்விக்கொள்கையில் இந்தி திணிப்பு இல்லை என முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பாஜகவில் இணைந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை கோவை சித்தாப்புதூரில் உள்ள பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “பாஜக வில் இணைந்தது பெருமையாக உள்ளது. சாதாரண மக்களுக்காக செயல்பட கூடிய கட்சியாக பாஜக உள்ளது. கோவை பாஜகவின் முக்கிய தளமாக உள்ளது. 45 வயதுக்கு குறைவான இளைஞர்கள் வருகிற தேர்தலில் தமிழகத்தில் பாஜகவை மிகவும் எதிர்நோக்கி உள்ளனர். என்ன பொறுப்பு வழங்கினாலும் அதை ஏற்று செயல்படுவேன்.

தேர்தலில் எந்த இடத்தில் கட்சி போட்டியிட சொன்னாலும் அதற்கு தயாராக உள்ளேன். தமிழகத்தில் வருகின்ற தேர்தலில் இளைஞர்கள் அதிகமாக பாஜகவிற்கு வாக்களிப்பார்கள். மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் இந்தி திணிப்பு இல்லை. மத்திய அரசில் தமிழர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. பிரதமர் மோடி செல்லும் இடங்களில் எல்லாம் தமிழின் தொன்மையை முதன்மைப்படுத்துகிறார்.

நீட் தேர்வு கட்டாயம் வேண்டும் என்பது வல்லுனர்கள் கருத்தாக உள்ளது. கேரளாவில் வெற்றிகரமாக நீட் தேர்வு நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தை மாற்றுப்பாதையில் கொண்டுபோக வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. பொருளாதாரத்தை சரியாக கையால்வதில் திராவிட கட்சிகள் தவறிவிட்டது. தமிழகத்தில் பாஜக ஒரு புதுப் பாதையை உருவாக்கும்.” எனத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com