“28 ஆண்டுகளில் 98 பேர் என்கவுன்ட்டர்; இது அரசு அப்பட்டமாக நடத்தும் சட்டவிரோத கொலை” - எவிடென்ஸ் கதிர்

எவ்வளவு பெரிய கிரிமினல்களையும் கைது பண்ணுங்கள், வெளிவர முடியாதபடி சிறையில் தள்ளுங்கள், வலுவாக விசாரணை செய்யுங்கள். இங்கு புலனாய்வுத்துறை தோற்றுவிட்டது.
சீசிங் ராஜா, எவிடென்ஸ் கதிர்
சீசிங் ராஜா, எவிடென்ஸ் கதிர்pt web
Published on

28 ஆண்டுகளில் 98 பேர் என்கவுன்ட்டர்

26 ஆண்டுகள்... 98 பேர் உயிரிழப்பு.. தமிழகத்தில் ரவுடிகள், கொள்கையர்கள், பாலியல் கொடுமை செய்தோர் என கடந்த கால்நூற்றாண்டில் காவல்துறையினர் நடத்திய என்கவுன்ட்டர் வேட்டையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 100-ஐ நெருங்கி நிற்கிறது. சென்னையில் மட்டும் 27 ரவுடிகளின் கதை எண்கவுன்டரில் முடிந்து போயுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

என்கவுண்டர் செய்யப்பட்ட இடத்தில் காவல்துறையினர், சீசிங் ராஜா
என்கவுண்டர் செய்யப்பட்ட இடத்தில் காவல்துறையினர், சீசிங் ராஜாpt web

கடந்த வாரம் காக்காதோப்பு பாலாஜி, தற்போது சீசிங் ராஜா என்கவுன்டரில் கொல்லப்பட்ட நிலையில், என்கவுண்டர் சரியா? தவறா? என்ற விவாதங்கள் தீவிரமடைந்துள்ளன.

இந்நிலையில், என்கவுண்டர் மூலம் சட்டம் ஒழுங்கை சரியாக வைத்திருப்பதுபோல், சமூகத்திற்கு காட்ட காவல்துறை முயற்சி செய்வதாக சமூக செயற்பாட்டாளர் எவிடென்ஸ் கதிர் குற்றம்சாட்டியுள்ளார்.

சீசிங் ராஜா, எவிடென்ஸ் கதிர்
தஞ்சை | ஆசிரியையின் கணவரை அடித்து விரட்டிய தனியார் பள்ளி தாளாளர் - காரணம் என்ன? வைரலாகும் வீடியோ

அரசு அப்பட்டமாக நடத்தும் சட்டவிரோத கொலை

புதிய தலைமுறைக்கு பிரத்யேகமாக பேட்டி அளித்த அவர் கூறியதாவது, “இது என்கவுன்ட்டர் கிடையாதுங்க. சட்டவிரோத கொலை. மாநில அரசு அப்பட்டமாக நடத்தும் படுகொலை. எத்தனை பெரிய கிரிமினலாக இருந்தாலும், சட்டத்தின் முன் நிறுத்திதான் தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும். அதைத்தான் சட்டம் சொல்கிறது. ஆனால், காவல்துறையினர், ‘அவர்கள் தாக்க வந்தார்கள். அதனால் சுட்டோம்’ என சொல்கின்றனர்.

கடைசியில் நடந்த இரு படுகொலைகளிலும் கள்ளத்துப்பாக்கி இருக்கிறது என்றார்கள். அப்படியானால் தமிழ்நாட்டில் கள்ளத்துப்பாக்கி கலாச்சாரம் வந்துவிட்டதா? கள்ளத்துப்பாக்கி உங்களது மாநிலத்தில் இருந்தால் அதைத் தடுக்க வேண்டிய பொறுப்பு ஆணையருக்கு இருக்கிறதுதானே? அவர் மீது என்ன நடவடிக்கை எடுப்பீர்கள்?

சீசிங் ராஜா, எவிடென்ஸ் கதிர்
"ஆதாரம் இருக்கு.." - ஆம்ஸ்ட்ராங் கொலை நடந்தப்போ..! சீசிங் ராஜா மனைவி பரபரப்பு வீடியோ

புலனாய்வுத்துறை தோற்றுவிட்டது

சுட்டுக்கொல்லப்பட்டவர்கள் யாரும் தியாகிகள் அல்ல. ஆனால், ஏன் நடக்கிறதென்று பார்க்க வேண்டும். சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்று அரசின் மீது கடும் குற்றச்சாட்டுகள் இருந்தது. இந்த என்கவுன்ட்டர்களின் மூலம் சட்டம் ஒழுங்கை சரியாக வைத்துள்ளோம் என்ற பாவலாவை சமூகத்திற்கு காட்ட முயற்சி செய்கின்றனர். ரவுடிகளுக்கு ரவுடிகளின் மொழியில் பதில் சொல்ல வேண்டுமென்றால் காவல்துறை என்ன ரவுடியா?

என்கவுன்ட்டர்களை தடுக்க வேண்டுமென்றால் இங்கு சட்டத்தின் ஆட்சியும், நீதிமன்றத்தின் ஆட்சியும் நடக்க வேண்டும். எவ்வளவு பெரிய கிரிமினல்களையும் கைது பண்ணுங்கள், வெளிவர முடியாதபடி சிறையில் தள்ளுங்கள், வலுவாக விசாரணை செய்யுங்கள். இங்கு புலனாய்வுத்துறை தோற்றுவிட்டது. அதைத்தான் நான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன்” என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com