திருச்சிக்கு இன்று வருகை தந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார். பின்னர், புதிய சர்வதேச விமான முனையத்தை துவக்கி வைத்தார். அப்போது அங்கு பேசிய அவர்...
”தமிழ் குடும்பத்தை சேர்ந்த ஒவ்வொருவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். கனமழை காரணமாக கடந்த சில வாரங்கள் மிகவும் சிரமத்தை ஏற்படுத்தியது - மத்திய அரசு உங்களுக்கு எல்லா உதவிகளையும் செய்து வருகிறோம்.
விஜயகாந்தை நாம் இழந்துள்ளோம் - சினிமாவில் மட்டும் அல்ல அவர், அரசியலிலும் கேப்டனாக இருந்து வந்துள்ளார். விஜயகாந்த் மக்களின் இதயத்தை கொள்ளை கொண்டுள்ளார் - தேசிய நலனுக்கு விஜயகாந்த் செயல்பட்டுள்ளார். விஜயகாந்த் குடும்பத்தாருக்கு எனது இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.
வரக்கூடிய 25 ஆண்டுகளில் நாம் மிகவும் வளர்ச்சியான நாடாக நாம் மாற்ற வேண்டும். பாரத நாட்டின் பிரதிபலிப்பு தான் தமிழ் நாடு - தமிழகத்திற்கு வரும் போதெல்லாம் ஒரு புதிய சக்தியை நான் நிரப்பிச் செல்கிறேன். திருச்சி நகரம் என்றாலே வளமான வரலாற்று சான்றுகள் உள்ளது - பல்லவர்கள், சோழர்கள், நாயக்கர்கள் இங்கு ஆட்சி செய்துள்ளனர்.
தமிழ் கலாச்சாரம் குறித்து நண்பர்களுடன் கற்றுக் கொண்டுள்ளேன். உலகில் எங்கு சென்றாலும் தமிழகத்தை பற்றி தமிழ் மொழியை பற்றி நான் பேசாமல் வர மாட்டேன். டெல்லி செங்கோட்டையில் செங்கோல் நிறுவப்பட்டு இருப்பதை நீங்கள் பார்க்கலாம் - கடந்த 10 ஆண்டுகளில் நவீன கட்டமைப்பை நாடு பெற்றுள்ளது. கட்டுமானம் மற்றும் சமூம கட்டமைப்பில் இது வரை இல்லாத அளவில் வளர்ச்சி பெற்றுள்ளது.
பெரிய முதலீட்டாளர்கள் எக்லாம் நம் இந்தியாவில் முதலீடு செய்து வருகிறீர்கள் - தமிழ்நாடு மேக் இன் இந்தியா திட்டத்தில் பிராண்ட் அம்பசிடராக மாறி கொண்டுள்ளது. மாநில வளர்ச்சி மூலம் தேசத்தின் வளர்ச்சி என்பதை அடிப்படையாக வைத்து செயல்பட்டு வருகிறோம். தமிழகம் விரைவான வளர்ச்சி பெறும் போது கண்டிப்பாக தமிழக வளர்ச்சியால் நாடும் வளர்ச்சி அடையும்.
புதிய விமான முனையம் காரணமாக இணைப்பு திறன் மூன்று மடங்கு அதிகரிக்கும். திருச்சியில் விமான இனைப்பின் மூலம் பல்வேறு நாடுகளுக்கு செல்லும் வசதி. புதிய வணிகம் போன்ற பல சிறப்புகள் கிடைக்கும். தமிழகத்தில் ரயில் இணைப்புளை மேலும் வலு சேர்க்க ஐந்து புதிய திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம், சிதம்பரம், வேலூர், மதுரை, ராமேஸ்வரம் போன்ற சுற்றுலா இடங்களை அனைவரும் வந்து பார்க்க இந்த புதிய ரயில் சேவைகள் உதவும்.
கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசின் கவனம் - கடற்கரை கட்டமைப்பை மேம்படுத்த அதிக கவனம் செலுத்தி வருகிறோம் - குறிப்பாக மீன் வளத்துறைக்கு நாம் தனி துறையை உருவாக்கினோம். காமராஜர் துறைமுகம் கொள்திறனை நாம் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளோம். இதன் வாயிலாக ஏற்றுமதி இறக்குமதிக்கு புதிய சக்தி கிடைக்க வழிவகை செய்துள்ளோம்.
கான்கிரீட் வீடுகள், கழிப்பிடம் மற்றும் கேஸ் இணைப்புகளை நாம் வழங்கி வருகிறோம். 2014க்கு முன்னர் 30 லட்சம் கோடி மட்டுமே வழங்கி வந்தனர். ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் 120 லட்சம் கோடி தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கியுள்ளது” என்றார்.