கோடநாடு எஸ்டேட் பங்களாவில் கொலை, கொள்ளை நடந்தபோது மின்சாரம் துண்டிக்கப்பட்டது தொடர்பான விசாரணை நடைபெற்றுவரும் நிலையில், அங்கு மின்சாரம் தடைபட வாய்ப்பே இல்லை என முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் எஸ்டேட் வாகன ஓட்டுநர் திவாகரன் தெரிவித்திருக்கிறார்.
கோடநாடு எஸ்டேட்டிற்கு மின்தடை எப்போதும் ஏற்பட்டுவிடக் கூடாது என்ற நோக்கத்தில், கோத்தகிரியில் இருந்து 17 கிலோ மீட்டர் தூரம் வரை, நிலத்திற்கு அடியில் மின் ஒயர்கள் எடுத்துச் செல்லப்பட்டு, மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு எஸ்டேட் பங்களாவில் கொலை, கொள்ளை சம்பவம் அரங்கேறியதாக குறிப்பிட்ட அந்த நேரத்தில், மின்சார வாரியத்தின் சார்பாக மின்சாரம் துண்டிக்கப்படவில்லை என்றும், மின் விநியோகம் சீராக இருந்ததாகவும் மின்சார வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சம்பவம் நடந்தபோது வெளியில் இருந்து வந்தவர்களோ, உள்ளேயே இருந்தவர்களோ மின் இணைப்பை துண்டித்திருக்கலாம் என வாகன ஓட்டுநர் திவாகரன் கூறியிருக்கிறார்.