பயன்பாடில்லாத ஆழ்துளை கிணறுகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட ஈரோடு ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து பலியானான். தமிழக மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்திய இந்த சம்பவத்துக்குப் பிறகு பாதுகாப்பற்ற நிலையில் உள்ள ஆழ்துளை கிணறுகளை மூட வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பாதுகாப்பு இல்லாத ஆழ்துளை கிணறுகளை கண்டறிந்தால் தகவல் தெரிவிக்கும்படி பொதுமக்களை ஈரோடு மாவட்ட கலெக்டர் கதிரவன் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்நிலையில் ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த மல்லன்குழி ஊராட்சி உட்பட்ட மெட்டல்வாடி இருந்து கர்நாடக மாநிலம் பிசில்வாடி ரோட்டில் மெட்டல்வாடி ஊரை ஓட்டி பஞ்சாயத்து சார்பில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டது. தற்போது இந்தக் கிணற்றில் தண்ணீர் இல்லாததால், இது பயன்பாடு இல்லாமல் உள்ளது. இந்த ஆழ்துளைக் கிணற்றை மூடி வைத்து மூடாமல் அங்கு உள்ள மரகட்டைகளை வைத்து மூடியுள்ளனர்.
அதே போல் குருபரகுண்டி கிராமத்திலும் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியிலும் ஆழ்துளைக் கிணறு ஒன்று மூடப்படாமல் உள்ளது. இதனையும் கல்லை வைத்துள்ளனர். செயல்படாத ஆழ்துளை கிணற்றை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் கதிரவன் உத்தரவிட்டும் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.