ஈரோடு: பணிக்கு சென்ற வனக்காப்பாளர் சடலமாக மீட்பு - போலீசார் விசாரணை

ஈரோடு: பணிக்கு சென்ற வனக்காப்பாளர் சடலமாக மீட்பு - போலீசார் விசாரணை
ஈரோடு: பணிக்கு சென்ற வனக்காப்பாளர் சடலமாக மீட்பு - போலீசார் விசாரணை
Published on

அந்தியூர் அருகே அத்தாணி வனப்பகுதியில் நஞ்சு அருந்தி வனத்துறை ஊழியர் இறந்து கிடந்த சம்பவம் குறித்து பர்கூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரை மாவட்டம் நாகமலை என்ஜிஓ காலனியைச் சேர்ந்தவர் பிரபாகரன் (28). இவர், அந்தியூர் அருகே உள்ள காட்டூரில் தங்கி கடந்த இரண்டரை ஆண்டுகளாக சென்னம்பட்டி மற்றும் பெரியதண்டா வனச்சரகத்தில் வனக்காப்பாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு அடிக்கடி உடல்நல குறைவு ஏற்பட்ட காரணத்தினால் கடந்த இரண்டு மாதமாக மருத்துவ விடுப்பில் சென்றிருந்தார்.

இந்நிலையில், பணிக்கு செல்வதாக தனது தாயிடம் கூறிச்சென்ற பிரபாகரன் அந்தியூர் வனப்பகுதிக்கு உட்பட்ட அத்தாணி வனச்சரகத்தில் இறந்துகிடந்தார். இதுபற்றி அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் பர்கூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

விசாரணையில் உடல்நலக்குறைவு காரணமாக மனம் உடைந்த பிரபாகரன் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்தனர். பிரேதத்தை உடற்கூறு ஆய்வுக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த பர்கூர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com