கள்ளிடைக்குறிச்சியில் அரசு பேருந்தை இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் வழிமறித்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரை அரிவாளால் வெட்டிய சம்பவத்தை சுட்டிக்காட்டி எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், அரசு பேருந்து ஊழியர்கள் மீது நடத்தப்பட்டுள்ள இந்த கொடுஞ்செயலை வன்மையாக கண்டிப்பதாகக் கூறியுள்ள அவர், “திமுக அரசு பொறுப்பேற்றது முதல் தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, அராஜகம், அடாவடி, கஞ்சா கலாசாரம் என சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது.
நாள்தோறும் நடைபெறும் சம்பவங்களால் பொதுமக்களும், குறிப்பாக பெண்களும் பகலிலேயே நடமாட அஞ்சுகிற நிலைமை ஏற்பட்டுள்ளது. ரவுடிகளுக்கும் குண்டர்களுக்கும் காவல்துறை மீதான பயம் முற்றிலும் இல்லாமல் போய்விட்டது.
இதுபோன்ற சம்பவங்கள் இனியும் தொடராமல் இருக்க காவல்துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதித்து, குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கிட வேண்டும்” என்று கூறியுள்ளார்.