“தேசிய கீதம் குறித்து ஆளுநர் முன்னரே கடிதம் எழுதியுள்ளார்” - எடப்பாடி பழனிசாமி

ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையை முழுவதுமாக படிக்காமல் வாழ்க தமிழ்நாடு, வாழ்க பாரதம் எனக் கூறி தனது உரையை இரண்டு நிமிடங்களில் நிறைவு செய்தார்.

நடப்பாண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில் சபாநாயகர் அப்பாவு மற்றும் செயலாளர் சீனிவாசன் ஆகியோர் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மலர்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

இந்நிலையில் சட்டப்பேரவையை தொடங்கிவைத்த ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையை முழுவதுமாக படிக்காமல் வாழ்க தமிழ்நாடு, வாழ்க பாரதம் எனக் கூறி தனது உரையை இரண்டு நிமிடங்களில் நிறைவு செய்தார்.

எடப்பாடி பழனிச்சாமி
🔴 LIVE | TN ASSEMBLY | ஆளுநர் உரையை அப்படியே பதிவேற்ற தீர்மானம்!

இது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் மத்தியில் பேசினார். அவர் கூறுகையில், “ஆளுநர் சபாநாயகருக்கு ஒரு கடிதம் எழுதியிருந்ததாக சபாநாயகரே தெரிவித்துள்ளார். அந்த கடிதத்தில், ஆளுநரின் உரைக்கு முன்னதாக தமிழ்தாய் வாழ்த்தும் அதைத்தொடர்ந்து தேசியகீதமும் இசைக்கப்படவேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார். இதை சபாநாயக்கர் நிறைவேற்றாததால், ஆளுநர் உரையை படிக்கவில்லை என்று தெரியவந்துள்ளது” என்றார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com